மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிப்பில் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் (Anti Indian) திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 10 -ஆம் தேதி வெளியானது. தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம், மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் கிண்டலடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள, ஒரு தியேட்டருக்குள் புகுந்த பா.ஜ.கவினர், படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தால், இரவுக் காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | விஜய் - சிவகார்த்திகேயன் சந்திப்பு! இதுதான் காரணமா?


அதாவது, பெரியகுளத்தில் உள்ள பார்வதி தியேட்டரில் ‘ஆன்டிஇந்தியன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இரவுக்காட்சி திரையிடப்பட இருந்த நேரத்தில், தியேட்டருக்குள் புகுந்த பா.ஜ.கவைச் சேர்ந்த 10 பேர், படத்தை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, இந்தப்படம் இந்துக்களை இழிவுபடுத்துவதாலும், எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராக உள்ளதாலும் இப்படத்தை திரையிடக்கூடாது' என்று அவர்கள் கோஷமிட்டுள்ளனர். பா.ஜ.கவினரின் போராட்டத்தால் அங்கு அசாதாரண சூழல் நிலவியுள்ளது. இதனையடுத்து இரவுக்காட்சி ரத்து செய்யப்பட்டு, படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 


மேலும், தியேட்டருக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆன்டி இந்தியன் திரைப்பட பேனரை இறக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களின் மிரட்டலையடுத்து பேனரும் இறக்கி வைக்கப்பட்டது. பா.ஜ.கவினரின் போராட்டத்தால், ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குனர் ப்ளூ ஷர்ட் மாறனிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், " 'உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திர ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே நாங்கள் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். மேலும் இப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்' என தெரிவித்தார்.


ALSO READ | 'பீஸ்ட்'படத்தின் படப்பிடிப்பு நிறைவு! முதல் சிங்கிள் எப்போது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR