விஜய் - சிவகார்த்திகேயன் சந்திப்பு! இதுதான் காரணமா?

இளைய தளபதி விஜய் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் அண்மையில் சென்னையில் சந்தித்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 10:28 AM IST
விஜய் - சிவகார்த்திகேயன் சந்திப்பு! இதுதான் காரணமா? title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் (Beast) திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகவும் வேகமாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் 100வது நாள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்றுடன் சூட்டிங் நிறைந்ததாக பீஸ்ட் படக்குழு அறிவித்துள்ளது. கடைசி நாளில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும், நடிகர் விஜயும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!

இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்துள்ள ’டான்’ திரைப்படத்தின் சூட்டிங்கும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். காமெடி நடிகர் சூரி, பிரியங்கா அருள்மோகன், குக்வித் கோமாளி புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. டான் திரைப்படத்தில் சிவகார்த்திகயேன் கல்லூரி மாணவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பீஸ்ட் மற்றும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க | Vidya Balan: அறைக்கு அழைத்த இயக்குநர்: பல ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டிவிட்ட அஜித் பட நடிகை

அப்போது, அங்கிருந்த விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இவருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் கொடுத்தது. அந்தப்படத்தை தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் தான் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் நீண்ட நாள் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News