மறைந்த முன்னாள் பாஜக தலைவர் பிரமோத் மஹாஜனின் மகளும் பாஜக இளைஞர் அணிக்குத் தலைவருமான பூனம் மஹாஜன் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் தமிழக சட்டப்பேரவையை பாஜக இளைஞர் அணியின் சார்பாக இன்று பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன் சென்னை வந்து இருந்தார்.


சென்னை வந்தது இருந்தார் அவர் நடிகர் ரஜினிகந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். நேற்று நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்பில் ரஜினியுட்ன எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பூனம் வெளியிட்டிருக்கிறார்.