மீண்டும் ரிலீஸ்-ஆ....வசூலை தெறிக்க விடும் லவ் டுடே படம்
லவ் டுடே படத்தின் நான்காவது நாள் வசூல் வெளியாகி உள்ளது. மொத்தமாக இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.
மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்
இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி இதுவரை மொத்தமாக இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது. நான்காவது நாள் முடிவில் 3.15 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக லவ் டுடே படம் நான்கு நாட்களில் 17.75 கோடி வசூலை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார். அதன்படி, 'லவ் டுடே' மீதான மிகப்பெரிய அன்பைப் பெற்றுள்ளது, தற்போது தெலுங்கு பார்வையாளர்களிடம் கொண்டு வருகிறோம், எனவே தயாரிப்பாளர் தில் ராஜு சாருடன் இணைந்திருப்பது மதிப்புக்குரியது. தெலுங்கில் மிக விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.
மறுபுறம் இதுகுறித்து ‘லவ் டுடே’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தில் ராஜூ அவர்களுடன் ’லவ் டுடே’ படத்தின் தெலுங்கு பதிப்பை வியாபாரம் செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதம் ‘லவ் டுடே’ படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ