பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமீர்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் லால் சிங் சத்தா படம் வெளியானது.இப்படம் 1994-ல் வெளியாகிச் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற 'Forrest Gump' என்ற ஹாலிவுட் படத்திலிருந்து ரீ-மேக் செய்யப்பட்டிருந்தது.இந்தியா முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான. தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டத். ஆனால் எந்த மொழியிலும் லால் சிங் சத்தா படம் சரியான வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து பலரும் அமீர்கானை விமர்சித்தனர்.
இந்தச் சூழலில் எப்போதும் சர்ச்சையான கருத்தை கூறிவரும் கங்கனா ரணாவத் லால் சிங் சத்தா தோல்வி குறித்தும், அமீர்கான் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “இன்றைய பார்வையாளர்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். அதனால்தான் புறக்கணிப்பு கலாசாரம் வந்துவிட்டது.ஆமிர் கானின் `லால் சிங் சத்தா' போன்ற படங்களைப் பார்ப்பதற்காக பார்வையாளர்கள் ஏன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி.
2 கோடி ரூபாய்க்கு இணையான நடிப்பை கொடுத்து விட்டு 200 கோடி ரூபாயை வாங்கிக் கொள்கிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவர் தனது படங்களுக்கு 200 கோடி ரூபாய் வசூலிக்கிறார். ஏன் இந்த அநியாயமான நடைமுறை இன்னும் இண்டஸ்ரியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமீரின் `லால் சிங் சத்தா' திரைப்படம் தோல்வியடைந்தது புறக்கணிப்பு கலாசாரத்தால் அல்ல. இந்தியாவுக்கு எதிரான அவரது கருத்துக்களால்தான்” என்றார்.
முன்னதாக, இந்த படம் திரைக்கு வர தயாரானபோது அமீர்கான் இந்தியாவில் சகிப்பு தன்மை இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று தனது மனைவி கூறியதாக பேசிய வீடியோவை பலரும் வலைத்தளத்தில் பகிர்ந்து லால்சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 'என்ன அப்படி சொல்லாதீங்க' அசல் கோலார் ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ