இணையத்தில் அடிக்கடி சில செயல்களை செய்து ட்ரெண்டாகும் பிரபலங்களுள் ஒருவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.  பாலிவுட் திரையுலகின் பிரபலமான மற்றும் திறமையான நடிகரான இவர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாக மாறியுள்ளார்.  இவர் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக கொடுத்திருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் பெரும் பேச்சை கிளப்பியுள்ளது, அப்படி என்ன புகைப்படம் என்றால் அவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார்.  இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பர்ட் ரெனால்ட்ஸ் என்பவர் இந்த மேகசினின் அட்டை படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் இதேபோல் புகைப்படங்களை கொடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | புதுவிதமான கிரைம் திரில்லர்! தேஜாவு திரைவிமர்சனம்!


பர்ட் ரெனால்ட்ஸை பார்த்து இன்ஸ்பைர் ஆகி தான் ரன்வீர் இதனை செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது, அதேசமயம் இவர் பேஷன் குறித்து கூறியுள்ள தைரியமான பேச்சு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.  பேஷன் உலகில் இதுபோன்று நிர்வாணமாக போஸ் கொடுப்பது ஒரு சாதாரணமான விஷயம் தான், எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ரன்வீர் கூறியுள்ளார்.  இந்த புகைப்படங்கள் dietsabya என்கிற பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  ரன்வீர் சிங் அளித்துள்ள ஸ்டேட்மெண்டை சில ரசிகர்கள் ஆதரித்து வந்தாலும் சிலர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



இந்த புகைப்படங்களுக்கு இணையவாசிகள் பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா இதற்கு எப்படி அனுமதித்தார்கள் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்,  இந்த புகைப்படங்கள் திறையுலகிலும், ஃபேஷன் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பேசுபொருளாக மாறி வருகிறது.  நடிகை ஹன்சிகா இந்த புகைப்படத்திற்கு பயர் எமோஞ்சியை அளித்துள்ளார்.  


மேலும் படிக்க | பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு! தயாரிப்பு இந்த நிறுவனமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ