சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'டான்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, சூரி, முனீஷ்காந்த், காலி வெங்கட், ஆர்ஜே விஜய், பால சரவணன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  டாக்டர் படம் வெளியாகி சிவகார்த்திகேயனின் தரத்தை உயர்த்திய நிலையில் தற்போது டான் படமும் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.  சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!


இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தகட்டமாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  தற்போது அனுதீப் இயக்கத்தில் 'எஸ்கே 20' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.  அதனைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே 21' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.  இப்படி இரண்டு படங்களில் பிசியாக இருப்பவர் தற்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் கமிட் செய்துள்ளார்.



கடந்த 2021ம் ஆண்டு யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'எஸ்கே 22' படத்தை இயக்கவிருக்கிறார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் பிரபலம் கியாரா அத்வானியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ வெளியாகும் என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது.  தோனியின் வாழ்க்கை வரலாறை வைத்து வெளியான படத்தில் கியாரா அத்வானி நடித்து இருந்தார். இந்த 'எஸ்கே 22' படத்தின் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR