தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2

தயாநிதி அழகிரியும் அஜித்தும் சந்தித்ததற்கு பின்னால் மங்காத்தா 2 இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 27, 2022, 04:37 PM IST
  • அஜித்தை சந்தித்த தயாநிதி அழகிரி
  • மங்காத்தா 2 படம் உருவாகிறது?
  • மங்காத்தா 2 படத்தை இயக்க வெங்கட் பிரபு தயார்
 தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2 title=

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான மங்காத்தாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம் ஜி, மஹத் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நெகட்டிவ் ரோலில் அஜித்தின் நடிப்பு பிரமிப்பாகவே இருந்தது. படத்தை அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

Ajith

படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் மங்காத்தா 2 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இந்த 11 வருடங்களில் தென்படவில்லை. அதேசமயம் அஜித் ஒத்துக்கொண்டால் மங்காத்தா 2 எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என இயக்குநர் வெங்கட் பிரபுவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | தனுஷுடன் இணையும் ப்ரியங்கா... எந்தப் படத்தில் தெரியுமா?

இந்நிலையில் தயாநிதி அழகிரி தனது மனைவி அனுஷாவுடன் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகியோரை சந்தித்தார். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

 

தயாநிதியும், அஜித்தும் ஏன் திடீரென சந்தித்தனர் என்பதுதான் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கும் சூழலில், இந்த சந்திப்பானது மங்காத்தா 2 திரைப்படத்துக்கான தொடக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் தயாநிதி அஜித்தின் ரசிகர் என்பதால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

ஒருவேளை இது மங்காத்தா 2 படத்துக்கான சந்திப்பாக இருக்கும்பட்சத்தில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | படம் ரிலீஸே ஆகல அதுக்குள்ள ஓடிடி தேதியா? விக்ரம் ஓடிடி ரிலீஸ் தேதி

இதற்கிடையே இந்தச் சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு, அவரை சுற்றி இருக்கும்பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ப்லிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News