அனிருத் இசையில் உருவான வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேலைக்காரன்". 


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.


இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


சென்னை ஐடிசி ஹோட்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தம்பி ராமையா, மைம் கோபி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, மதன் கார்கி, வி.ஜே அஞ்சனா என பலர் பங்கேற்றுள்ளனர்.


ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று மற்ற மூன்று பாடல்களும் கோலாகலமாக வெளியாகியது. அந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்தது பூம்பராங் வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.


வீடியோ:-