வசூலை அள்ளிக்குவிக்கும் புஷ்பா; 3 நாட்களில் 200 கோடி வசூல்
Pushpa Box Office Collection: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா நடித்த `புஷ்பா` திரைப்படம் 3 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா: தி ரைஸ் - பார்ட் I' (Pushpa: The Rise part 1) திரைப்படம் மூன்று நாட்களில் ரூ 200 கோடி வசூலித்து, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
E4 என்டர்டெயின்மென்ட் படி, 7 டிசம்பர் 2021 அன்று வெளியான படத்தின் தற்போதைய மொத்த வசூல் ரூ.173 கோடி. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது சமூகக் கணக்கில் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!
ரமேஷ் பாலா ட்விட்டரில், டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வார இறுதியில் 'புஷ்பா' திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் முதல் 3 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய சாதனை ஆகும். அதேசமயம் Spider Man No Way Home - USD 587 மில்லியன் 2. Sheep Without A Shepherd 2 - USD 54 மில்லியன் 3 Pushpa - USD 21 மில்லியன் வசூல் செய்துள்ளது.
Spider-Man No Way Home படத்திற்கு போட்டியாக புஷ்பா
கடந்த டிசம்பர் 17 தேதி புஷ்பா படமானது திரைக்கு வந்தது. 'Spider-Man No Way Home' படம் வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது புஷ்பா.
'அல்லு அர்ஜுன் (Allu Arjun) இன் புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் புஷ்பா தி ரைஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.
ALSO READ | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR