நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ALSO READ | ஒரே நாளில் வெளிவருகிறதா சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள்?
இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தை தெரிவிக்கும் விதத்தில் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து கதாநாயகி பூஜா ஹெக்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றுடன் பீஸ்ட் படத்தில் என்னுடைய படப்பிடிப்பு நிறைவடைகிறது. பீஸ்ட் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக உள்ளது. இந்த படம் உங்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று நான் நம்புகிறேன். நெல்சனின் ஸ்டைலும், விஜயின் ஸ்டைலும் இணைந்து உங்களை உற்சாகப்படுத்த போகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் என்னை சௌகரியமாக உணர செய்ததோடு, நன்கு பழகினார்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்தது சுற்றுலாவிற்கு சென்றது போல் ஒரு உற்சாகத்தை கொடுத்தது.
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021
படப்பிடிப்பின் இறுதி நாளில் என்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடித்து வரும் கேரள நடிகை அபர்ணா தாஸ்க்கும் இன்றுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | அண்ண யாரு தளபதி! ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR