ராணி போல் வாழும் பிரியங்கா மோகன்.. மலைப் போல் குவியும் சொத்துக்கள்
Priyanka Arul Mohan Net Worth 2024: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு 2024: கம்மி படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபலமான நடிகையாக ஆனவர் நடிகை பிரியங்கா மோகம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை பிரியங்கா மோகன் :
தமிழில் ஒரு சில படங்களிளேயே நடித்துள்ள பிரியங்கா மோகன் (Priyanka Mohan), அதற்குள்ளாக பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். 2021ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘டாக்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அடுத்து 2022ஆம் ஆண்டில் அவருடனேயே‘டான்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். சூர்யாவுடன் ‘எதர்க்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்கள்தான் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது என்றாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை அளித்ததால் தொடர்ந்து கோலிவுட் படங்களிலேயே கமிட் ஆகி வருகின்றார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் தனுஷின் காதலியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இதுவரை எந்த படத்திலும் செய்யாத ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Manikandan Salary: ‘லவ்வர்’ படத்தில் நடிக்க மணிகண்டன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பிரியங்கா மோகன் சம்பளம் :
இதனிடையே கடையாக இவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா மோகம், ரூ.1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர், ஒரு படத்திற்கு பொதுவாக 70 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை வாங்கி வந்ததாகவும், கேப்டன் மில்லர் படம் மூலம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு விவரம் :
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை பிரியங்கா மோகனின் மொத்த சொத்து மதிப்பு 2 மில்லியன் டாலர்கள் இருக்குமாம். இதன் இந்திய மதிப்பு ரூ. 17 கோடி ஆகும். அதேபோல் தற்போது கதாநாயகியாக நடிக்க ஒரு படத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் பிரியங்கா மோகன் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
நடிகை பிரியங்கா மோகனின் அடுத்தடுத்த படங்கள் :
இதனிடையே நடிகை பிரியங்கா மோகன் தற்போது சினிமா உலகிற்கு வந்த புதிதில் 'டிக்டாக்' என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம், சில நாட்களுக்கு முன்னர்தான் வெளியானது. இதனை தொடர்ந்து, நடிகை பிரியங்கா மோகன் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ஓஜி என்ற பவன் கல்யாணின் படத்திலும், சரிபோதா சனிவாரம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். அடுத்து, ப்ரதர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ