Captain Miller First Review in Tamil: அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இப்படம் வரும் வெள்ளக்கிழமை அன்று (ஜனவரி 12) வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் அதற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர் திரைப்படம்..


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை, ‘சானிக்காயிதம்’ படத்தை இயக்கி பிரபலமான அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இவர் படம் என்றாலே, அதில் வெட்டு-குத்து-கொலை இருக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்திலும் துப்பாக்கி சண்டை-போர்கள காட்சிகள் என ரசிகர்களை ஈர்க்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 


கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், அதிதி பாலன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 


கேப்டன் மில்லர் படத்தை பார்த்து விமர்சனம் சொன்ன பிரபலம்..


கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. வழக்கமாக படம் வெளியாவதற்கு முன்னர் அப்படத்தின் காட்சிகள் அல்லது முழு படமே வேலைப்பார்த்த படக்குழுவினர் காண்பது வழக்கம். அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்தின் சில காட்சிகளை அதன் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பார்த்துள்ளார். இதையடுத்து, தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவையுல் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்திற்கான பின்னணி இசை மற்றும் மிக்ஸ் இசை பணியினை முடித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். 



மேலும், படம் நன்றாக உள்ளதற்கு அர்த்தமாக 5 ஃபயர் எமோஜிகளை குறிப்பிட்டுள்ள அவர், தனுஷின் இன்ட்ரோ காட்சியும் அதற்கான இசையும நன்றாக இருப்பதாக தனது பதிவில் கூறியிருக்கிறார். இவரது பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | ரெமோ இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் எஸ்ஜே சூர்யா!


கேப்டன் மில்லர் டிரையலருக்கு ரசிகர்கள் வரவேற்பு..


கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலரில், படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய நட்சத்திரங்கள் அனைவரின் கதாப்பாத்திரங்கள் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, இதுவரை ஹீரோயின் மெட்டீரியலாக பார்க்கப்பட்டு வந்த பிரியங்கா மோகன், இந்த படத்தில் புதுமை காட்டியிருக்கிறார். ‘அருவி’ படம் மூலம் புகழ் பெற்ற அதிதி பாலன் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ், இப்படத்தில் காவல் அதிகாரியாகவும், பின்பு போராளியாகவும் வருகிறார். 



கேப்டன் மில்லருடன் போட்டி போடும் படங்கள்..


வரும் பொங்கல் திருநாளை அடுத்து, பல முக்கிய தமிழ் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படமும், அருண் விஜய்யின் ‘மிஷன்: சேப்டர் 1’ படமும், விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படமும் வரும் 12ஆம் தேதியன்று வெளியாகின்றன. இதில் கேப்டன் மில்லர் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருப்பதால், இதற்கு குடும்பமாக ரசிகர்கள் வருவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 படமும் ஆக்ஷன் த்ரில்லர்தான். மெரி கிறிஸ்துமஸ் படம், கொலை-த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழியில் இப்படம் வெளியாக உள்ளது. அயலான் படத்தின் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தததை அடுத்து, இது குழந்தைகளுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கேப்டன் விஜயகாந்தின் மகனுடன் இணைந்து நடிக்க தயார் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ