பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் நகரில் உள்ள சைராபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்,'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' எனும் இந்து ஸ்லோகங்களை, அவர் சமீபத்தில் வெளியிட்ட தனிப்பட்ட பாடலில் பயன்படுத்தியுள்ளார் எனவும் இதனால், தானும், தான் சார்ந்த இந்து சமூகம் புண்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், ஊடகங்கள் தொடர்ந்து இதே வேலையை பார்த்து வருகிறது என்றும் இந்துக்களும், இந்து மதமும் தற்போது சிலரின் எளிய இலக்குகளாக மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | லவ் டுடே படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்


" 'ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா' என்ற ஸ்லோகத்தை இந்துக்களின் புனித கடவுளான ராமரை வணங்கும்போது நாங்கள் பயன்படுத்துவோம். அந்த ஸ்லோகத்தை ஆபாசமான காட்சிகள் நிறைந்த பாடலில், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்தியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது" என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்துகளை புண்படுத்தியதற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கரோத்தே கல்யாணி வலியுறுத்தியுள்ளார். 


தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் 'O Pari' என்ற இந்தியாவின் முதல் பான்-இந்தியன் பாப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அந்த பாடல்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நடிகை அளித்த புகாரை அடுத்து, அவர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ