அம்மாடியோ..ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..!
Raghava Lawrence Net Worth: கோலிவுட் திரையுலகின் கவனம் ஈர்க்கும் ஹீரோவாக வலம் வரும் ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் ஒரு நடிகராக வலம் வருபவர், ராகவா லாரன்ஸ். சுமார் 30 ஆண்டுகளாக கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகின் ஒரு அங்கமாக இருக்கும் இவர், மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு (Raghava Lawrence Net worth) குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ்:
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக இருந்து, நடிகராக உயர்ந்து படங்களையும் இயக்கியுள்ளவர் ராகவா லாரன்ஸ். இவர், நடிகரும் ஸ்டண்ட் இயக்குநருமான சூப்பர் சுப்பிராயனிடம் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது அதீத ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை ராகவா லாரன்ஸ் நனடமானடுவதை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து வியந்து போன அவர், “நீ பெரிய ஆளாக வர வேண்டும்..” என்று வாழ்த்தியிருக்கிறார். அதோடு மட்டும் நின்று விடாமல் சில இடங்களில் இவரை ரெஃபர் செய்து சினிமாவிலும் வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளார்.
தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு பின்னால் ஆடும் குரூப் டான்ஸர்களுள் ஒருவராக இருந்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதன் மூலமாக இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைத்தது. இதனை தக்க வைத்துக்கொண்ட ராகவா லாரன்ஸ், அப்படியே நடிகராகவும் வளர்ந்தார்.
மேலும் படிக்க | நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
பன்முக திறமைகள்:
ராகவா லாரன்ஸ், பெரிய ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தார். இதையடுத்து சில படங்களில் ஹீரோவாக நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் நாகார்ஜுன், பிரபாஸ் உள்ளிட்டோரை வைத்து ராகவா லாரன்ஸ் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் 2007ஆம் ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளியான முனி திரைப்படம் இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பேய் கதையாக உருவாகியிருந்த இந்த படத்தை வெவ்வேறு கதைகளுடன் பல பார்ட்டுகளாக இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.
சம்பள விவரம்-சொத்து மதிப்பு:
ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence Salary) தான் நடிக்கும் படங்களுக்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. தான் இயக்கும் படங்களுக்கு அதே சம்பளத்தை தான் இவர் எதிர்பார்ப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் இருந்து சிலர் கூறுகின்றனர். ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலில் (Raghava Lawrence Net worth and assets) அவருக்கு சொந்தமாக சென்னையில் பல கோடி மதிப்பிலான வீடு ஒன்று உள்ளதாகவும் 4 விலை உயர்ந்த கார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இவர் திருமுல்லை வாயில், ஆவடி-அம்பத்தூர் சாலையில் ராகவேந்திர கோயிலையும் கட்டியுள்ளார். இந்த கோயிலும் ராகவா லாரன்ஸிற்கு சொந்தமானதுதான். தான் படங்கள் மூலம் சம்பாதிக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக கொடுக்கிறார். அது மட்டுமன்றி இவர் பல குழந்தைகளின் மருத்துவ செலவுகளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸின் நடிப்பில் கடைசியாக ‘சந்திரமுகி 2’ (Chandramukhi 2) திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX) படத்திலும் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க மடோனா சபாஸ்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ