தமிழ் திரைப்படங்களை வரிசையாக வெளியிடும் சீசன் தொடங்கிவிட்டது. இன்று (செப்டம்பர் 28) ஒரே நாளில் வரிசையாக மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்:


இந்த வாரம் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்று வர சரியான காரணம் கிடைத்துவிட்டது. ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கிடந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் ஹாரர் பாணியில் இந்த படம் வெளியாகியிருக்க, திகில்-த்ரில்லர் பட பாணியில் வெளியாகியுள்ளது ‘இறைவன்’ திரைப்படம். இந்த படங்களை அடுத்து, குடும்ப ரசிகர்களுக்காக உருவாகியுள்ள எமோஷனல் த்ரில்லர் படம் சித்தா. இந்த மூன்று படங்களின் ட்ரைலர் மற்றும் டீசர்களும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் எந்த படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது தெரியுமா..? 


சந்திரமுகி 2:


2005 ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடிய படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வேட்டையன் ராஜாவாக நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்த படத்தையும் பி.வாசுதான் இயக்கியுள்ளார். 


மேலும் படிக்க | Iraivan Review: இறைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை மிரட்டியதா? இதோ முதல் விமர்சனம்


இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் பலர் தங்களது விமர்சனங்களை கொடுத்துள்ளனர். படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும் இடைவேளை காட்சியில் சரியான ட்விஸ்ட் காத்துக்கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் இல்லை என்றும் கங்கனா ரனாவத்தன் நடிப்பிற்காகவே எக்ஸ்ட்ரா ஸ்டார்களை வாரி கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடும்பத்தினருடன் சந்திரமுகி 2 படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என படம் பார்த்த ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 


இறைவன்:


‘தனிஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி-நயன்தாரா ஆகியோர் ஒன்று சேர்ந்து நடித்துள்ள படம், இறைவன். சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படம், கொஞ்சம் சொதப்பலான திரைக்கதையால்  பொறுமையை சோதிப்பதாக ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கலாம் என்றும், படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தூக்கம் வந்து விடுவது போல தோன்றுவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 


படம் முழுவதும் ஜெயம் ரவி ஸ்கோர் செய்வதாகவும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் ரசிகர்கள் ‘இறைவன்’ படம் குறித்து பாராட்டி வருகின்றனர். இடைவேளைக்கு பிறகு படம் மிகமும் நீளமாக உள்ளது போல உணர்வதாகவும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 


சித்தா:


சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள படம், சித்தா. இந்த படத்தை அருண் குமார் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன்னர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கியுள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கும் படம் இது. படத்தின் நாயகனான சித்தார்த்தே இதனை தயாரித்தும் வழங்கியுள்ளார். சித்தப்பாவிற்கும் குழந்தைக்கும் இடையேயான பாசத்தையும் உணர்த்துவம் வகையில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்னன. நடிகர் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் படத்தின் இயக்குநர் அருண் குமாருடன் இணைந்து படத்தை பார்த்தார். படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், இதனை பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


எதை முதலில் பார்க்கலாம்..? 


சந்திரமுகி 2 திரைப்படம் ‘சுமாருக்கும் மேல் ரகம்’ என்ற விமர்சனத்தையும், இறைவன் படம் ‘சுமார் ரகம்’ என்ற விமர்சனத்தையும், சித்தா திரைப்படம் ‘மிகவும் நல்லாயிருக்கு’ என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளன. எனவே, குடும்பத்தினருடன் சென்று சித்தா படத்தை முதலில் பார்க்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 


மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ