சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..! காரணம் தெரியுமா..?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 9, 2023, 02:49 PM IST
  • சந்திரமுகி 2 படம் வரும் 15ஆம் தேதி வெளியாக இருந்தது.
  • இதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • எப்போது தெரியுமா..?
சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..! காரணம் தெரியுமா..?  title=

2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 15ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது. 

சந்திரமுகி 2:

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. முதல் பாகத்தின் கதையை அடிப்படையாக வைத்து புது கதாப்பாத்திரங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் வந்த முருகேசன் (வடிவேலு) கதாப்பாத்திரம் மட்டும் இதிலும் தொடர்கிறது. 

படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு:

சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. படத்தில் சிஜி எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | 2 நாளில் 200 கோடியை தாண்டிய ஜவான்..! அசல் வசூல் நிலவரம் என்ன?

என்ன காரணம்? மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி என்ன? 

சந்திரமுகி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, நேற்று ஒரு ட்வீட்டினை வெளியிட்டிருந்தது. அதில் தொழில் நுட்ப ரீதியான வேலைபாடுகள் இன்னும் கொஞ்சம் நடைபெற இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சந்திரமுகி 2

படத்தை இம்மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எக்ஸ்ட்ரா ட்ரீட்டுடன் ரசிகர்களை திரையில் சந்திக்கிறோம் என்றும் லைகா நிறுவனம் தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

17 வருடங்களுக்கு பிறகு..

1993ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மணிசித்ரதாழு’ எனும் படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக வெளிவந்த படம்தான் சந்திரமுகி. இதில், ஷோபனா சந்திரமுகியாக நடித்திருப்பார். ஆள் அரவமற்ற இடத்தில் இருக்கிறது ‘வேட்டையபுரம் அரண்மனை’. இந்த இடத்தில் இருக்கும் ஆபத்து தெரியாமல் குடும்பத்தினருடன் இங்கு குடிபெயரும் கணவன்-மனைவி. இதனை, பேய் படம் போலவே கொண்டு சென்று கடைசியில் ‘Split Personality Disorder’ என்று ட்விஸ்டு வைத்துள்ளனர். இதனால் சந்திரமுகி எனும் கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறாள் நாயகி. க்ளைமேக்ஸில் நடந்தது என்ன? இதுதான் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தின் கதை. இது மனோதத்துவம் தொடர்பான கதையாக உருவாகியிருந்தது. ஆனால் இரண்டாம் பாகமோ, அதற்கு நேர்மறையான கதையாக வெளிவர இருக்கிறது. 

பழிவாங்கும் கதை.. 

வேட்டையன் ராஜாவால் உயிரிழந்த சந்திரமுகிக்கு தனி கதை உள்ளது. வேட்டையன் ராஜாவிற்கும் தனி கதை உள்ளது. இவர்கள் இருவரின் முன் ஜென்மத்தை சந்திரமுகி 2 படத்தில் காண்பிக்க உள்ளனர். அதனால் படத்தின் பழிவாங்கும் அம்சங்கள், ஹாரர் அம்சங்கள் என பல இடம் பெற உள்ளன. படத்தின் ட்ரைலரிலும் “200 வருட பகை..” என்ற டைலாக் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

படக்குழு:

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லக்ஷமி மேனன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | சண்முகத்தை கொல்ல வந்த குடும்பம்-நடக்கப்போவது என்ன? பல ட்விஸ்டுகளுடன் ‘அண்ணா’ எபிசோட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News