விஜய்சேதுபதிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தெலுங்கில் உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான 'உப்பெனா' படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்கனர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க | மலேசியாவுக்கு ஏற்றுமதியாகும் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள்...
இந்நிலையில் உலகமகன் என்ற தனது கதையை திருடி, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாகவும், படத்தின் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும்கோரி தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் சேதுபதி தரப்பில், உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தான் வாங்கவில்லை என்றும், அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், விஜய்சேதுபதிக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் .
மேலும் படிக்க | 13 ஆண்டு வரவு செலவை வெளியிடுகிறேன் - வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ