பிரபல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் பிரபல சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண விழாவுக்கு சென்ற நேரத்தில் இளையதளபதி நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்துவதற்காக சென்றிருந்தார். மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு செல்லும் நேரத்தில் முதலமைச்சர் மேடைக்கு சென்றதால், அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய்யும் வணக்கம் செலுத்திக் கொண்டனர்.



இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இளைய தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்’ நிறுவனம் இப்படத்தினை ரிலீஸ் செய்கிறது. 



முதன்முறையாக அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் திரைப்படம் என்ற சாதனையையும் பீஸ்ட் படைக்க உள்ளது. ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பீஸ்ட் படத்தில் ஸ்பையாக விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR