நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா?

விவாகரத்துக்குப் பிறகு முதன்முறையாக நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 07:06 PM IST
  • நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்ட சமந்தா
  • முதன்முறையாக அவருடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
  • மஜ்லி திரைப்படம் ரிலீஸாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா?  title=

திரைத்துறையில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தங்களின் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | தெலுங்கில் கால் பதிக்கும் வெங்கட் பிரபு: பின்னணி என்ன?

தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருக்கும் சமந்தா மற்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், திடீரென நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா ஏப்ரல் 5 ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரும் ஷிவா நிர்வாணாவின் மஜிலி திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.

காதல் கதையம்சத்தைக் கொண்ட இந்த திரைப்படம் இவர்களின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படம் வெளியாகி கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். இதனால், சைதன்யாவுடன் இருந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. 

சமந்தாவும், நாக சைதன்யாவும் 2010-ல் இயக்குனர் கௌதம் மேனனின் ’ஏ மாயா செசாவே’ படப்பிடிப்பில் ஒருவரையொருவர் சந்தித்தனர். பின்னர் காதலிக்க தொடங்கிய அவர்கள், 2017 ஆம் ஆண்டு கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 5 ஆம் ஆண்டு திருமண நாள் நெருங்கிய நிலையில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்தனர். தற்போது பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துகோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான சட்டநடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | ‘என்னைப்பற்றிய வதந்திகளை நிறுத்துங்கள்’ - பாலிவுட்டுக்கு போன தென்னிந்திய நடிகை வேதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News