தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். மாஸ் நடிகர்களான அஜித், விஜய்யை போன்று மீசை, தாடி என ஒரே தோற்றத்தில் தொடர்ந்து நடிக்காமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேது, காசி, அந்நியன், தாண்டவம், ஐ என பல்வேறு படங்களில் கடினமான கதாப்பத்திரங்களை ஏற்று அசால்டாக நடித்திருப்பார். இதன் பலனாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஐந்து பிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில அரசு விருது என பல்வேறு விருதுகள் அவரைத் தேடி வந்தன. விக்ரம் என்றால் உழைப்பு, படத்திற்கு தேவை என்றால் உயிரையும் கொடுத்துவிடுவார் என அவரது ரசிகர்களே சொல்வது உண்டு. அந்த அளவுக்கு தன் உடலை முழுவதுமாய் வருத்திக் கொண்டு நடிக்கும் மகா கலைஞன்.


குறிப்பாக 'ஐ' திரைப்படத்தில் விக்ரமை பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். ஒரு கிலோ உடல் எடையை குறைக்கவே அனைவரும் திக்குமுக்காடி வரும் நிலையில் சரசரவென உடல் எடையை ஏற்றி இறக்கி அவர் காட்டிய வித்தை ரசிகர்களை தாண்டி சக நடிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுபோன்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு நடிப்பது அவரது உடல்நலத்திற்கு நல்லதல்ல எனவும் அப்போது எச்சரிக்கப்பட்டது. 



மேலும் படிக்க | ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிடுகிறாரா எலான் மஸ்க்?


இதனிடையே அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 



நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 


இந்த நிலையில் இந்த தகவலை அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரம் மறுத்துள்ளார். தனது தந்தைக்கு லேசான நெஞ்சுவலி மட்டுமே ஏற்பட்டதாகவும், மாரட்டைப்பு ஏதும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் துருவ் தெரிவித்துள்ளார்.


இந்த சூழ்ல்நிலையில் தங்கள் குடும்பத்தின் தனியுரிமை காக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். எனவே விக்ரம் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் விக்ரம் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR