நான் முன்பே விளக்கமளித்துவிட்டேன்.. அனுராக் காஷ்யப்புக்கு பதிலளித்த விக்ரம்
தன்னுடைய ‘கென்னடி’ படத்தில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை என்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நடிகர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவருடைய ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்பட்டதால், இந்த படத்திற்காக இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருக்கிறார். அந்த திரையிடலுக்குப்பிறகு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசியபடத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட நடிகர் விக்ரமை மனதில் வைத்து எழுதியிருந்தேன். இதனால் தான் படத்திற்கும் கென்னடி என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனெனில் நடிகர் விக்ரமின் ஒரிஜினல் பெயர் ‘கென்னடி’. ஆனால் அவர் என் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று, அதன்படி இந்த படத்தில் நடிக்க நடிகர் ராகுல் சம்மதித்தார் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதன்படி அதில், “அன்புடைய அனுராக் காஷ்யப், சமூக ஊடகங்களில் உள்ள நம் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்காக ஒருவருடத்திற்கு முன் நடந்த உரையாடலை மீளாய்வு செய்கிறேன். இந்தப்படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் பதிலளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக அறிந்த உடன் உங்களை தொடர்புகொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிவிட்டேன் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதையும் விளக்கமளித்தேன். அந்த தொலைபேசி உரையாடலில் நான் சொன்னது போல, உங்களின் ‘கென்னடி’ படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால்.
அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மரணம்! இறப்புக்குக் காரணம் போதை மருந்தா?
இதனையடுத்து நடிகர் விக்ரமின் இந்த பதிவுக்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், "முற்றிலும் சரி பாஸ் சார். இது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக சொல்கிறேன். அவர் வேறொரு நடிகரிடம் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கண்டறிந்தபோது அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ் அப் நம்பர் வைத்திருக்கிறார் என்பதை அறிந்தோம். மேலும் அவர் எனக்கு சரியான தகவலை அளித்தார்.
மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார், ஆனால் நாங்கள் அதற்குள் ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்தோம். மேலும் அவர் கென்னடி என்ற பெயரை பயன்படுத்திய வகையில் அவர் எங்களை ஆசிர்வதித்தார். நான் நேர்காணலில், இந்தப் படத்துக்கு எப்படி கென்னடி என பெயர் வந்தது என்பதையும் தான் தெரிவித்தேன். நானும் சீயான் சாரும் இணைந்து வேலை செய்யாமல் ஓய்வு பெறமாட்டோம். நாங்கள் சேதுவுக்கு முந்தைய நாட்களுக்கு செல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Thalapathy 68: விஜய் - வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ