தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விக்ரம், ஆரம்பத்தில் இருந்ததை போலவே இன்னும் திரைப்படங்களில் இளமை துள்ளலோடு நடித்து வருகிறார்.  இன்னும் சில தினங்களில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 'கோப்ரா' படம் வெளியாகவுள்ளது.  தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விக்ரம் கலந்து கொள்வதில் விக்ரம் பிசியாக இருந்து வருகிறார்.  சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்ரம் ரசிகர்களுடன் உரையாடினார்.  அதனைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்-1' படம் இவரது இத்தனை வருட திரைவாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமையப்போகிறது, செப்டம்பர்-30ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா?


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் தொடங்கியது.  இந்த படத்தை வருகின்ற டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார், டிசம்பர் மாதம் இப்படம் வெளியானால் இது விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் நான்காவது படமாக அமையும்.  தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த இருமொழி திரைப்படத்தை லூசியா மற்றும் யூ-டர்ன் போன்ற படங்களை இயக்கிய கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குவதாக கூறப்படுகிறது.  இருப்பினும் இதுகுறித்த அதிகார்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் விக்ரம் கன்னட திறையுலகில் எண்ட்ரியாகும் முதல் படமாக இது அமையும்.



மேலும் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சியான் 61' படத்தில் நடிக்கிறார், இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  கேஜிஎப் படத்தின் தங்க சுரங்கத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாவதாக சில செய்திகள் தெரிவிக்கிறது.  அடுத்ததாக கோப்ரா படத்தை தொடர்ந்து மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கேஜிஎப்2 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் - கட்டணத்தை ரத்து செய்த அமேசான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ