#சியான் விக்ரமின் அடுத்த படம் அப்டேட் இதோ!
இந்தியில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் சரித்திர பின்னணிக் கொண்ட திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சியான் விக்ரமின் நடிப்பில் உருவான ஸ்கெட்ச் திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளிவருவதையடுத்து மற்றொரு படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
சரித்திரப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு மஹாவீர் கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரைப்படமான என்னு நிண்டே மொய்தீன் காவியப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்த மஹாவீர் கர்ணா படத்தையும் இயக்குகிறார்.
இத்திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நியூயார்க்கைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. மலையாளத்தில் உருவான என்னு நிண்டே மொய்தீன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெரும் என்று எதிர்பார்கின்றனர்.