ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக விளங்குபவர், சிலியன் மர்ஃபி (Cillian Murphy). இவர் நடிப்பில் தற்போது ஓப்பன்ஹீமர் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இவர், இந்த படத்தில் நடிப்பதற்காக ‘பகவத் கீதை’ படித்ததாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓப்பன்ஹீமர் திரைப்படம்:


பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan)இயக்கியுள்ள படம், ஓப்பன்ஹீமர். இந்த படம், அணு குண்டை கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த அணு இயற்பியாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்பவரின் வாழ்வைத்தழுவி எடுக்கப்பட்ட கதை. இந்த படத்தின் ஹீரோவான ஓப்பன்ஹீமர் கதாப்பாத்திரத்தில் சிலியன் மர்ஃபி நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 


‘பகவத் கீதையை படித்தேன்..’ 


இந்திய புராண கதைகளில் மிகவும் பழமையானதாக பார்க்கப்படுவது, பகவத் கீதை. மகாபாரதக்கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. போருக்கு செல்லும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கொடுக்கும் உபதேசம்தான் பகவத் கீதை. இந்த கதையை ஓப்பன்ஹீமர் படத்தில் நடிப்பதற்காக படித்ததாக சிலியன் கூறியுள்ளார். 


ட்ரைலர் வசனம்:


ஓப்பன்ஹீமர் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், “நான் அனைவரின் இறப்பாக மாறினேன், உலகை அழிக்க பிறந்தவன் நான்” என படத்தின் ஹீரோ சிலியன் மர்ஃபி பேசுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த வசனம் பகவத் கீதையின் ஒரு பகுதியில் இருந்து ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘உங்க பிரா சைஸ் என்ன..?’ ரசிகர் கேட்ட கேள்விக்கு செருப்படி ரிப்ளை கொடுத்த பிரபல நடிகை..!


பகவத் கீதையை படித்தது குறித்து பேசிய சிலியன் மர்ஃபி “படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது கதாப்பாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்வதற்காக பகவத் கீதையை படித்தேன். அதில் மிகவும் அற்புதமான விஷயங்கள் புதைந்து கிடப்பதாக கருதுகிறேன். அந்த புத்தகம் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது” என கூறியுள்ளார். 


சிலியன் மர்ஃபி:


ஹாலிவுட்டில் 1996ஆம் ஆண்டு நுழைந்த ஐரிஷ் நடிகர் சிலியன் மர்ஃபி. ஆரம்பத்தில் படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்த இவர், மெல்ல மெல்ல பிரபலமான படங்களில் நடிக்க தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியான தி டார்க் நைட் ட்ரையாலஜி, 28 டேஸ் லேட்டர் போன்ற படங்கள் மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. சிலியன் மர்ஃபியை உலகறிய செய்த தொடர், பீக்கி ப்ளைண்டர்ஸ். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு கேங்ஸ்டராக தாமஸ் ஷெல்பி என்பவர் வளர்வது போல இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய ரசிகர்களிடம், குறிப்பாக தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. 


கிரிஸ்டோஃபர் நோலனுடன் இவர் முதன் முதலில் ‘இன்செப்ஷன்’ என்ற படம் மூலம் கைக்கோர்த்தார். அதன் பிறகு, தற்போது ஓப்பன்ஹீமர் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 


கிரிஸ்டோஃபர் நோலன் படங்கள்:


ஆங்கில இயக்குநர்களுள் பிரபலமானவர்களுள் ஒருவராக விளங்குபவர், கிரிஸ்டோஃபர் நோலன். சையின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை மட்டுமே எடுத்து வரும் இவர், நேர்த்தியான திரைக்கதையையும் படத்தையும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். கடைசியாக இவர் இயக்கியிருந்த டெனெட் படம், உலக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது, இண்டர்ஸ்டெல்லார் என்ற படம் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது. மொமெண்டோ, இன்செப்ஷன், டன்க்ரிக் என பல படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார். சை-ஃபை ரசிகர்களுக்கு இவரை பிடித்தாலும், சாதாரண மக்களுக்கு இவர் இயக்கும் படங்கள் எதுவும் புரிவதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. தற்போது இவர் இயக்கியுள்ள ஓப்பன்ஹீமர் திரைப்படம், இந்த மாதம் 21ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. 


மேலும் படிக்க | ‘மாநாடு’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்..! ஹீரோ யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ