‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை சிந்து. இவர், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சிந்து:


சின்னத்திரை மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளுள் ஒருவர், சிந்து. இவர், அங்காடி தெரு படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்தார். அது மட்டுமன்றி அவ்வப்போது சிறு சிறு காமெடி ரோல்களில் நடிப்பது அல்லது சிறு வேடங்களில் ஒரு சில சீன்களில் நடிப்பது என அவ்வப்போது திரையுலகில் தலைக்காட்டி வந்தார். குறிப்பாக வடிவேலுவுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 


மேலும் படிக்க | தமிழ் படத்தை தயாரிக்கும் எலோன் மஸ்க்? விஜய் ஆண்டனி சொன்ன தகவல்!


புற்றுநோயால் பாதிப்பு:


சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த நேர்காணலில் பேசியுள்ள அவர், ஆரம்பத்தில் தனது மார்பகத்தில் சிறியதாக எழுந்த கட்டியை கவனிக்காமல் விட்டதாகவும் இதுவே தனது மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்த பின்பு, மார்பக புற்றுநோய் உடல் முழுவதும் இவருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மார்பகத்தை இழந்தார்:


3 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்துவின் உடலில் கண்டுபிடிக்கபட்ட புற்றுநோய், அவரை படாத பாடு படுத்தியுள்ளது. பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவரது மார்பகத்தையே அகற்ற வேண்டிய சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது. இதனால், அவரது ஒருபக்க மார்பகமும் அகற்றப்பட்டுள்ளது. 


உறவினர்கள் கூட உதவ முன்வரவில்லை:


தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட போது எந்த உறவினரும் உதவ முன்வரவில்லை என்றும், பணம் கொடுத்தவர்கள் கூட தற்போது அந்த பணத்தை திரும்ப கேட்டு நச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவினர் ஒருவர் தன்னை சீக்கிரமே செத்துவிடுவாய் என தனக்கு சாபம் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு பக்க மார்பகத்தை அகற்றியவுடன் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என நினைத்தவருக்கு விதி, மீண்டும் சதி செய்துள்ளது. 


சிந்துவிற்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தன் தினசரி வாழ்விலேயே பல போராட்டங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். 10 நிமிடம் உட்கார கூட தன்னால் முடியவில்லை என கூறியுள்ள அவர், இரவில் மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார். இது, தன் நுரையீரலில் இருந்து அதிக நீரை வெளியேற்றியதால் ஏற்பட்ட மாற்றம் என்று அவர் கூறியுள்ளார். 


ஒரு நாளைக்கான மருத்துவ செலவு:


சிந்துவின் மகளும் சகோதரரும்தான் தற்போது அவரை பார்த்துக்க்கொள்வதாக சிந்து தெரிவித்துள்ளார். தனக்கு 10 நாளைக்கு தேவைப்படும் மருந்துகளை வாங்கவே 6,500 ரூபாய் செலவாகிவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னர், தன் வருமானத்தை பிறருக்காக கொடுத்து உதவி செய்த இவருக்கு தற்போது உதவ யாரும் முன்வரவில்லை என கூறியுள்ளார். 


நடிகர்கள்-திரைப்பிரபலங்களிடம் உதவி:


சிந்து, தனக்கு உதவி செய்யுமாறு தற்போது திரைப்பிரபலங்களிடமும் பிரபல நடிகர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, இவர் நடிகரும் நடிகர் சங்க நிர்வாகியுமான விஷாலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க | ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு விஷ்ணுவின் அவதாரம்தான் டைட்டில்..! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ