நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. அந்த பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், 'நா ரெடி தான் வரவா'பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். மேலும், நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

’நான் ரெடி’ பாடல்...


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம், லியோ. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைப்பெற்றது. தற்போது சென்னையில் கடைசிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விஜய் இன்னும் சில நாட்களில் தன்னுடைய பங்கு படப்பிடிப்பினை முடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியானது. அனிருத் இசையில் ”நான் ரெடிதான் வரவா..” என தொடங்கும் இப்பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்துள்ளது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல், தளபதிர் ரசிகர்கள் மட்டுமன்ற் பலரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில்தான் இந்த பாடல் குறித்தும் விஜய் குறித்தும் ஒரு நபர் சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 


மேலும் படிக்க | Prithviraj Sukumaran: படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு பெரும் விபத்து..! அச்சச்சோ என்னாச்சு?


போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் விஜய்?


லோகேஷ் கனகராஜுடன் விஜய் முதன் முதலாக இணைந்த படம், மாஸ்டர். இந்த படத்தில் விஜய் முழு நேரமும் குடிக்கும் குடிகாரனாக நடித்திருப்பார். பிறகு மனம் திருந்தி வாழ்பவராகவும் நடித்திருப்பார். ஆனால், இந்த படம் வெளிவந்தபோது இந்த குடிப்பழக்கம் பெரிதாக பேசப்படவில்லை. லியோ திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளிவர உள்ளதை தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சை இப்போதே எழுந்துள்ளது அப்படக்குழுவினருக்கு ஜர்க் கொடுத்துள்ளது. மேலும் பொது வெளிகளில் நல்லது கெட்டது என பல விஷயங்களை பேசும் விஜய் படங்களில் இப்படி நடித்து போதை பழக்கத்தை ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. 


போதை-லோகேஷ் கனகராஜ்-பிரிக்க முடியாத கூட்டணி:


இளைஞர்கள் அனைவருக்கும் பிடித்த இயக்குநர்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர், லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் இயக்கியுள்ள பெரும்பாலான படங்களில் போதை பொருள் கடத்தும் கேங்க்ஸ்டர்தான் வில்லன். அந்த போதை பொருளை சமூகத்தில் நடமாட செய்யாமல் தடுப்பவன்தான் ஹீரோ. கைதி படத்தில் ஆரம்பித்து, கடைசியாக வெளியான விக்ரம் படம் வரை இதே கான்செப்ட்தான். விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் லியோ படத்திலும் போதை பொருள் கடத்துபவர்தான் வில்லனாக இருப்பார் என கூறப்படுகிறது. விஜய், இதில் திருந்தி வாழும் கேங்க்ஸ்டராக நடித்துள்ளதாகவும் சில தகவலகள் சுழலுகின்றன. 


லியோ படத்திற்கு சிக்கல்:


லியோ படத்தில் விஜய், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். போதாக்குறைக்கு நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு இப்படம் மூலம் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் ஒவ்வொருவரின் கதாப்பாத்திரம், கதை, காட்சிகள் என எதையும் லீக் ஆகாமல் படக்குழு பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரால் படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி போதை மருந்துக்கு எதிரான குற்றாச்சாட்டுக்கு ஆதரவு பெருகினால் அந்த புகைப்படம் மற்றும் போதை சம்பந்தமான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும் நிலை வரலாம். இது குறித்து லியோ படக்குழுவினரிடம் இருந்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | “அப்பாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது..” ரோபோ சங்கரின் மகள் பரபரப்பு பேட்டி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ