நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று  வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் உதகை உள்ள ஸ்ரீ கணபதி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் அமரன் திரைப்படத்தை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்திருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உதகை கணபதி திரையரங்குக்கு வருகை புரிந்தார். அவருக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?


பின்பு அவரை ஊர்வலமாக திரையரங்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர் மேடையில் அவருக்கு படுகர் இன பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது. பின்பு உரையாற்றிய அவர் திரைப்படத்தை பற்றியும் திரைப்படத்தில் இயக்கத்தை பற்றியும் பொது மக்களிடையே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்த்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களின் ஏற்பாட்டில் இன்று வெளியிடப்பட்ட திரைப்படத்தின் இந்த காட்சியை காண வந்ததாகவும், இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் திரைப்படமாக உள்ளது. இந்தப் படத்தில் கூற வரும் உணர்வை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முடிகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படத்தின் மூலம்  இயக்குனர்களுக்கும்,  தயாரிப்பாளர்களுக்கும் பார்வையாளர்கள் நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார்கள். 


பார்வையாளர்ளுக்கும் சினிமா எடுப்பர்களுக்கும் நடுவில் பாலம் இந்த படம் மட்டுமே அதுவே போதுமானது என்றார். படத்தில் தொடர்ச்சியான பாடல்கள் இல்லை, 100 பேர் முதல் 200 பேர் வரை இணைந்து ஆடும் பாடல்கள் காட்சி இல்லை, துணை கதை மற்றும் நகைச்சுவைகள் எவையும் இடம் பெறவில்லை. படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, கதை, எழுத்து, திரை கதை, நடிப்பு உள்ளிட்டவர்களை மட்டுமே நம்பி உண்மையான ராணுவ வீரருடைய வாழ்க்கை வரலாறை ஒரு உணர்ச்சிகரமாக காண்பிக்க உள்ளோம் என்ற நம்பிக்கையை மூலதனமாக வைத்து எடுத்த படம் இது. இதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்து, என்னை நீலகிரி மாவட்டத்தின் கலாச்சாரத்தின் படி என்னை கௌரவித்தது எனும் மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். 


நீலகிரி மக்கள் இன்று அளவும் தங்களது பாரம்பரியத்தை கடைபிடித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இங்கு வந்தால் மன அமைதி எனக்கு கிடைக்கிறது. இந்த எனக்கு பொருத்தமாக உள்ளதா என எனக்கு தெரியாது ஆனால் எந்தவித சலனமும் இல்லாமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த அன்பை ஏற்றுக்கொண்டு நான் இங்கு நிற்கிறேன் அதற்கு மிக்க நன்றி எனத் தெரிவித்தார். இந்தப் படத்தைப் போலவே அடுத்த படமும் நல்ல நல்ல கதைகளோடு புதியதாக அமையும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்றார். அமரன் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் ராணுவத்தினர் சமூக வலைதளங்களில் திரைப்படத்தைக் குறித்து பேசியதை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. 


இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஏ டி ஜி பி ஐ மூலம் இந்த கதைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதை பற்றி இணையதளத்தில் தேடிப் பாருங்கள் எனக்கு கூறினார். இத்திரைப்படம் சென்சார் போர்டுக்கு செல்வதற்கு முன்பு இந்திய அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள ஏடிஜிபிஐ இந்த திரைப்படத்தை பார்த்து அவர்களின் ஒப்புதல்  மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இது ராணுவ சம்பந்தப்பட்ட கதை என்பதால் அவருடைய ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் எங்களிடம் உள்ளது. அதனால் யாரோ ஒருவர் கொடுக்கும் பேட்டிக்கு விளக்கம் கொடுத்தால் அது அவசியமிலலாததாகிவிடும். எனக்குத் தெரிந்து ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தெரிந்த சில தகவல்களை வைத்து சரியான தகவலா என சரி பார்த்து பேச வேண்டும். 


ஒவ்வொரு ரெஜ்மெண்டிலுக்கும் ஒவ்வொரு போர் கோக்ஷம் (War cry) வார்த்தை உள்ளது. குறிப்பாக அடி கொள், அடி கொள் என சொல்வார்கள் எனவும், துர்கா மாதாகி ஜே எனவும், போல் பஜிரங் வாலிக்கி ஜே எனவும் உள்ளது. போல் பஜிரங் வாலிக்கி ஜே என்பது ராஜ்கோட் ரெஜிமென்ட் சென்டரின் War cry வார்த்தை. இதை நான் மாற்றி வேறொன்றை எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் தான் அது தவறாகிவிடும். என்னோட சொந்த அரசியல் மற்றும் எனது தனிப்பட்ட விருப்பத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல இது. எனக்கும் அதிகமான கருத்துக்கள் உள்ளது. அந்த கருத்துக்களை கதாபாத்திரத்தின் மூலம் திணிக்கக் கூடாது என்பதை ஒரு இயக்குனராக நான் உணர்ந்து இருக்கிறேன். நான் தெளிவாகவும் இருக்கிறேன். சமூகப் பொறுப்பும் எனக்கு உள்ளது அனைத்து சமூக பொறுப்புகளும் கடைப்பிடிக்கப்பட்டு இந்தப் படம் சரியாக எடுக்கப்பட்டது என நான் நம்புகிறேன். ராணுவ அமைச்சரத்தின் சார்பிலும் அதற்கான ஒப்புதல் உள்ளது எனவும் தெரிவித்த அவர் இது தொடர்பாக  தனிப்பட்ட ஒருவர் பேட்டி அளித்தது தவறான தகவல் எனவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ