Amaran Box Office Collection Day 10 : சமீபத்தில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், மரியான். இந்த படத்தின் 10 நாள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
அமரன் திரைப்படம்:
2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய உயிரிழப்பு மேஜர் முகுந்த் வரதராஜனின் உயிரிழப்பை வைத்து வெளியான படம், அமரன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார், நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவான இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதாலும், திரைக்கதை வேகமாக இருந்ததாலும் இப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
மேஜர் முகுந்த்-இந்து ரெபேக்கா வர்க்கீஸ் காதல் கதை:
அமரன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் ஒன்று, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பும்தான். மேஜர் முகுந்தின் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்தே இருக்கிறார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள், ஒரே கல்லூரியில் படிக்கும் போது காதலித்த இவர்கள் பின்னர் பல தடைகளை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்ஷியா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இவர்களின் காதல் கதை படத்தில் குறைவாக இருந்திருந்தாலும், அது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நல்ல விமர்சனம்-நல்ல வசூல்:
அமரன் படம், தீபாவளி தினத்தன்று கடந்த அக்டாேபர் மாதம் 31ஆம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளே, நல்ல வசூலையும் விமர்சனத்தையும் உலகளவில் பெற்றது. அன்று மட்டும், சுமார் ரூ. 42 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, படம் நன்றாக இருக்கவே, அது குறித்த நல்ல விமர்சனங்களையும் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பலர் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று குடும்பம் குடும்பமாக பார்த்தனர். இந்த நிலையில், படம வெளியாகி 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அதன் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
10 நாட்கள் வசூல் விவரம்:
அமரன் படம், தற்போது வரை சுமார் ரூ.200 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம், வெளியாகி 3 நாட்களுக்குள்ளாகவே ரூ.100 கோடியை வசூலித்தது. தமிழகத்தை தாண்டி சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சர்ச்சை:
அமரன் படம் நன்றாக இருந்தாலும், அதில் இருக்கும் ஒரு விஷயம் பலர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முகுந்த் வரதராஜன், குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது. ஆனால், படத்தில் அதைக்காட்டவில்லை. இதையடுத்து, அந்த சமூகத்தை சேர்ந்த பலர் “ஏன் அதைக்காட்டவில்லை?” என பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் தன்னை ஒரு இந்தியனாகவும் தமிழனாகவும் மட்டுமே காட்டிக்கொள்ள நினைத்ததாகவும் அவரது குடும்பத்தினரே சாதிய குறியீடுகள் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.