குக் வித் கோமாளி என்பது ஒரு தனியார் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' (Cook with Comali) நிகழ்ச்சி. முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது. 


இந்த சீசனின் கடைசி ஷூட்டிங் தளத்தில் இருந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் வெளியிட்ட உருக்கமான பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகழ், அஷ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, கனி, பவித்ரா, ஷகிலா, மணிமேகலை, சரத், பாலா, பாபா பாஸ்கர், சுனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


ALSO READ | குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!


இந்நிலையில் இந்த குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஷ்வின் (Ashwin) அல்லது கனி (Kani) தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. எனினும், அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் ஜெயித்தாலும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.


 



 


இதனிடையே அஷ்வின் செஃப் தாமோ மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR