`குக் வித் கோமாளி 3` டைட்டில் வின்னருக்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவா?
பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன்-3ன் இறுதி சுற்றில் ஸ்ருதிகா அர்ஜுன் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது, அந்த வகையில் சாதாரண மக்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளும் ஒன்று குக் வித் கோமாளி. ஒரு சாதாரணமான சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியான நிகழ்ச்சியாக மாற்றி பலரையும் இது கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சியின் எபிசோடுகளை கண்டு மகிழ பலரும் தவம் கிடப்பார்கள், பாரபட்சமின்றி பலருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. குக் வித் கோமாளியின் முதல் இரண்டு சீசன்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக ஓடியது. இந்த மூன்றாவது சீசனிற்கும் முதல் இரண்டு சீசன்களில் தொகுத்து வழங்கிய ரக்ஷன் தொகுப்பாளராகவும், வெங்கடேஷ் பட் மாறும் தாமு நடுவராகவும் இருந்தனர்.
மேலும் படிக்க | முதன் முதலாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்!
இந்த சீசனில் ஸ்ருதிகா அர்ஜுன், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷினி, மனோபாலா, ராகுல் தாத்தா, வித்யுலேகா, கிரேஸ் கருணாஸ் போன்றவர்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இந்த சீசனில் இடையில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார், பலரும் எதிர்நோக்கி காத்திருந்த இறுதிச்சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. ஏற்கனேவே ஸ்ருதிகா தான் வின்னர் ஆவர் என்று பல செய்திகள் வெளியானது, மேலும் இதுவரை இரண்டு சீசன்களுக்கு கொடுக்கப்படாத அளவில் இரண்டு மடங்காக பரிசு தொகை கிடைக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
ஆனால் முதல் இரண்டு சீசன்களில் வெற்றிபெற்ற வனிதா விஜயகுமார் மற்றும் கனி திரு ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் பரிசுத்தொகை தான் ஸ்ருதிகாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் முதல் ரன்னராக தர்ஷனும், இரண்டாவது ரன்னராக அம்மு அபிராமியும் பரிசை தட்டி சென்றுள்ளனர். நேற்றைய தினம் இந்த இறுதிச்சுற்று நிகழ்ச்சி கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் ஒளிபரப்பானது. தற்போது இந்த சீசன் முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் 'குக் வித் கோமாளி சீசன் 4' எப்போது தொடங்கப்படும், யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ