சூப்பர் சிங்கராக வந்து குக் வித் கோமாளி மூலம் கோடிக்கணக்கான நெஞ்சங்களை அள்ளியவர் சிவாங்கி. கியூட்டான சிரிப்பு மற்றும் கபடமில்லா பேச்சு அவரை வெகுசீக்கிரமே மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இப்போது அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக சோஷியல் மீடியாக்களில் சிவாங்கி ஆர்மி, சிவாங்கி ரசிகர்கள் என பல பக்கங்கள் உள்ளன. யாராவது ஒருவர் சிவாங்கியை திட்டிவிட்டால் என்றால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த நபர் சமூகவலைதளங்கள் பக்கத்தில் தலைவைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு புல் போர்ஸாக இறங்கி அடித்துவிடுவார்கள் சிவாங்கி ரசிகர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் கடை திறப்பு விழா முதல் கச்சேரி நிகழ்ச்சி வரை என எங்கு சிவாங்கி சென்றாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கும்பலாக கூடி விடுகின்றனர். இந்த வரவேற்பும் ஆதரவும் தான் சிவாங்கியை சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு கூட்டிச் சென்றுள்ளது. சிவகார்த்திகேயனின் கியூட் தங்கையாக மாறியிருக்கும் அவருக்கு டான் படத்திலும் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்தப் படத்தில் நாயகிக்கு தோழியாக நடித்து ‘அடிபோலி’ வசனம் மூலம் இடம்பிடித்துவிட்டார்.



டான் படத்துக்குப் பிறகு சிவாங்கிக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகளும், பாடல் வாய்ப்புகளும் வந்து கொண்டே இருகின்றன. இதைவிட அவருடைய பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இப்போது அவருடைய புகழ் வெளிச்சம் நீண்டிருகிறது. ஏனென்றால் சிவாங்கி மூலம் ஒரு படத்துக்கோ அல்லது பாடலுக்கோ கிடைக்கும் புரோமோஷன் ரீச் வேற லெவலாக இருப்பதால், இதனையே ஒரு மார்க்கெடிங் உத்தியாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். 



பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஷம்சேரா’ விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ரிலீஸாக இருப்பதால், இந்தப் படத்துக்கான புரோமோஷன் பணிகளில் ரன்பீர் கபூர் இறங்கியுள்ளார். தமிழில் ரிலீஸாவதையொட்டி, புரோமோஷனுக்காக சிவாங்கியை அழைத்து பெருமை படுத்தியுள்ளார் அவர். அப்போது சிவாங்கியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் ரன்பீர் கபூர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த சிவாங்கி அந்தப் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கங்ளில் வெளியிட்டு, ஷம்சேரா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்ல வார்த்தையில்லை என மகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ