CWC 5 : குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! இவங்கள எதிர்பார்க்கவே இல்லையே!
Cooku With Comali Latest News Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இதில் புதிய கோமாளியாக ஒரு நடிகர் இறங்கவுள்ளார். அவர் யார் தெரியுமா?
Cooku With Comali Latest News Tamil : தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பது, குக் வித் கோமாளி. தற்போது இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கவுள்ளது. இதற்காக ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
குக் வித் கோமாளி சீசன் 5:
தற்போதுள்ள தொலைக்காட்சி சேனல்களுள் டாப் சீரியல்களையும்-ரியாலிட்டி ஷோக்களையும் கொண்டுள்ள சேனல், தளபதி நடிகரின் பெயரை கொண்ட அந்த சேனல்தான். இந்த சேனலில் முன்னர் சூப்பர் ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால், நாட்கள் உருண்டோட, அந்த நிகழ்ச்சிகளும் முடிந்து விட்டன. அதற்கு பதிலாக புத்தம் புதிய நிகழ்ச்சிகள் பல வர ஆரம்பித்து விட்டன. ஆனால் அவை முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. இதற்கு காரணம், மக்களின் மனநிலை மாற்றம் என்றும் கூறலாம். அப்படி, தற்போது மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி.
கடந்த 2019ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பித்தது. இதில் ரக்ஷன் தாெகுப்பாளராக உள்ளார். தமிழகத்தின் முன்னணி சமையல் கலை வல்லுநர்களான வெங்கடேஷ் பட்-தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் தான் கலந்து கொள்ளவில்லை என்று வெங்கடேஷ் பட் தெரிவித்தார். தற்போது அவருக்கு பதிலாக நடிகரும் சமையல் கலை வல்லுனருமான மதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார்.
புதிய கோமாளி..
அனைத்து குக் வித் கோமாளி சீசன்களையும் போலவே, இந்த சீசனிலும் குக்குகளும் கோமாளிகளும் சேர்ந்து சமைக்க உள்ளனர். இதில், சமையல் செய்பவர்களாக வரும் செலிப்ரிட்டிகள் அனைத்து சீசன்களுக்கும் கண்டிப்பாக மாறுவர். ஆனால், கோமாளிகள் ஒரு சிலர் நிலையாக இருப்பர். புதிய கோமாளிகளும் வருவதுண்டு. அந்த வகையில், இந்த 5வது சீசனுக்காக ஒரு புதிய செலிப்ரிட்டி கோமாளியாக களமிறங்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
பிரபல சீரியல் நடிகை..
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஹிட் அடித்த பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஷப்னம். இவர், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை உலகில் நடிகையாக இருக்கிறார். இவர் முதன் முதலில் நடித்த தொடர், தெய்வமகள். இந்த தாெடரில் இவர் நாயகிக்கு தங்கையாக நடித்திருந்தார். இதையடுத்து, ஷப்னம் தொடர்ந்து சில பிரபலமான தொடர்களில் நடித்தார். இவர் வில்லியாக நடித்த ராஜா ராணி தொடர் பெரிய ஹிட் அடித்தது. இவருக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சீரியல்களில் பெரிதாக தலைக்காட்டாத இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இவர்தான், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக களமிறங்க உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
குக் வித் கோமாளியில் பிக்பாஸ் பிரபலங்கள்..
வழக்கமாக பிக்பாஸ் சீசன் முடிந்தவுடன்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அப்படி இதற்கு முன்னர் நடந்து முடிந்த பிக்பாஸ் மூலம் பிரபலமான தினேஷ், விஷ்ணு, வினுஷா உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ