Ajith Kumar : வாழத்தெரிந்த மனிதர் அஜித்! சமையலும் செய்வார்..பைக் டூரும் செல்வார்..வைரல் போட்டோக்கள்!

Actor Ajith Kumar Latest Photos : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் படக்குழுவினருடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Actor Ajith Kumar Latest Photos : கோலிவுட் திரையுலகில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். நடிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் கேமராவின் கண்களில் இருந்து தள்ளி இருக்கும் இவர், கடந்த சில நாட்களாக பைட் டூர் சென்று வருகிறார். இவர், அடுத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இவரது ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், அஜித்குமார் தான் நடித்து வரும் விடாமுயற்சி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 

1 /7

பல கோடி தமிழ் ரசிகர்களை கொண்ட பிரபலங்களுள் ஒருவர், அஜித் குமார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 

2 /7

அஜித்குமாருக்கு நடிப்புத்துறை வேலை என்றால், பைக் டூர் செல்வதும், பயணங்கள் மேற்கொள்வதும் பிடித்த ஹாபிக்களாகும். பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், வருடத்திற்கு ஒரு முறையாவது தனது பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியாவின் பல பகுதிகளை விசிட் செய்து வருகிறார். 

3 /7

அஜித் குமார், நன்கு சமைக்கவும் தெரிந்தவர் என்பது அவருக்கு பிடித்த அனைவருக்குமே தெரியும். அந்த வகையில், சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் தன்னுடன் பணி புரிந்தவர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளார். 

4 /7

சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு முழு உடல் பரிசோதனை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு காதுக்கு பின்னால் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சில நாட்கள் ரெஸ்டில் இருந்த அஜித், தற்போது மீண்டும் தனது பைக் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். 

5 /7

இந்த பயணத்தில் விடா முயற்சி படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த ஆரவ் உள்பட பலர் இணைந்திருக்கின்றனர். அவர்களுடன் எடுத்த புகைப்படம்தான் இது. 

6 /7

மகிழ்ச்சியாக பில்லியர்ட்ஸ் விளையாடும் அஜித்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

7 /7

அஜித்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “வாழ தெரிந்த மனிஷன்பா இவரு..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.