பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்தினத்தை பிடித்த கொரோனா
Corona Victim Manirathnam: பிரபல இயக்குநர் மணிரத்தினத்திர்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிரபல இயக்குநர் மணிரத்தினத்திர்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினத்தின் பான் இண்டியா திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்பதால், மணிரத்தினம் தொடர்பான செய்திகள் அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்த மணிரத்தினம், தனது நீண்ட நாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை பிரமாண்டாக தயாரித்துள்ளார். மத்திய பிரதேசம், சென்னை, ஐதராபாத், புதுச்சேரி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று, 2022 செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தடுப்பூசி போட்டவர்களுக்கு வரும் கொரோனா பாதிப்பின் மாறிய அறிகுறிகள்
ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பட வெளியீடு தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளது.கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மணிரத்தினம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்த திரைப்படக் குழுவினர் உட்பட பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பொன்னியின் செல்வன் திரைப்பட வெளியீட்டை கொரோனா பாதிக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால அளவை குறைப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்
மேலும் படிக்க | COVID-19: புனேயில் BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ