8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி நடித்த செம்பியன் மாதேவி திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 25 க்கும் குறைவான திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் தற்போது விமர்சன ரிதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கடலூரில் கமலம் திரையரங்கில் செம்பியன் மாதேவி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் இன்று திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான லோக பத்மநாபன் வந்தபோது ரசிகர்கள் அவருடன் கை கொடுத்து, செல்பி எடுத்து கொண்டனர். நல்ல படம் என்று தங்களது கருத்துக்களையும் கடலூர் மக்கள் அவரிடம் தெரிவித்து சென்றனர். 


மேலும் படிக்க | Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லோக பத்மநாதன் கூறுகையில் நல்ல கதைகள் வெற்றி பெறும் என்பதை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ளனர், படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த 28 ஆம் தேதி சொந்த ஊரில் படம் ரிலீஸ் ஆகவில்லை என வருத்தம் தெரிவித்த நிலையில் கடலூரில் இந்த திரைப்படத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.


நடிகர்கள்:
கதாநாயகனாக நடித்து இருக்கும் லோக பத்மநாபன் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரெஜினா அவரது கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிந்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.


இயக்கம்:
தமிழ் சினிமாவில் கால காலமாக சொல்லிக் கொண்டு இருக்கும் பண்ணையார் குடும்பத்தின் மகன் தனக்கு கீழ் உள்ள நாயகியை காதலிக்கிறான். இதே கதையைதான் மீண்டும் லோக பத்மநாபன் எடுத்துள்ளார். திரைக்கதை மற்றும் காட்சிகள் எளிதில் யூகிக்க முடியும்படி இருந்தது வருத்தம். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | ‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே.. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ