‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..

Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 31, 2024, 01:50 PM IST
  • வேட்டையன் டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி
  • மாஸ் டைலாக் ட்ரெண்டிங்..
  • வைரலாகும் வீடியோ!
‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே.. title=

Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தன் கதாப்பாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறது. 

வைரல் வீடியோ..

நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்திற்கு டப்பிங் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், “குறி வெச்சா..இறை விழணும்…” என்று ரஜினிகாந்த் பேசியிருக்கும் பஞ்ச் டைலாக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்த வீடியோவில் நடிகர் ரஜினி ஒரு காட்சியில் “டைரக்டர் சார்..இது சூப்பர்..” என்று எந்த காட்சியை பார்த்தோ கூறுவது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 

வேட்டையன் படக்குழு:

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, பான் இந்திய நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர்,  ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது டப்பிங் பணிகளை முடித்துக்கொண்டனர். 

ரஜினிகாந்தின் 170வது படமான இது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் படம்பிடிக்க ஆரம்பிக்கப்பட்டது. சென்னை, திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பும் நடைப்பெற்றது. ரஜினிகாந்திற்குறிய காட்சிகள் முதலில் முடிக்கப்பட, அடுத்தடுத்த நாட்களில் பிற நடிகர்களை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. 

மேலும் படிக்க | Vettaiyan: ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது தகவல்!

பல ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி-அமிதாப்:

நடிகர் ரஜினிகாந்தை விட, இந்திய அளவிலும் பாலிவுட் அளவிலும் பெரிய நடிகராக விளங்குபவர் அமிதாப் பச்சன். 1991ஆம் ஆண்டு வெளியான ஹம் படத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து வேட்டையன் படத்தில் இணைந்திருக்கின்றார். இவர்களை ஒரே ஸ்கிரீனில் பார்க்க, ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டுள்ளனர். 

ரஜினி-அனிருத் காம்போ:

தற்போது, ட்ரெண்டிங் இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத். பெரும்பாலான மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். பேட்ட படத்தில் முதன் முதலாக ரஜினிக்கு இசையமைத்து கொடுத்த இவர் அடுத்து தர்பார் மற்றும் ஜெயிலர் திரைப்படத்திலும் இசையமைப்பாளராக இருந்தார். இதையடுத்து, இவர்களது காம்போ வேட்டையன் படத்திலும் வர்க்-ஆகுமா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக இருக்கிறது. அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திற்கும் அனிருத்தான் இசையமைப்பாளர். இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த ‘டிஸ்கோ’ பாடல் ஹிட் அடித்தது. 

மேலும் படிக்க | ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News