கஸ்டடி படத்தின் மூலம் வெங்கட் பிரபு முதன் முறையாக தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாகியுள்ள இப்படம், இன்று வெளியாகியுள்ளது. இதற்கு, டோலிவுட் மற்றும் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமாரான முதல் பாதி..


இன்று வெளியாகியுள்ள கஸ்டடி படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஒரு சிலரோ, படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இடைவேளை காட்சி மாஸாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 



மேலும் படிக்க | இவங்களுக்கு வயசே ஆகாதா? ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்!


“நாக சைதன்யா மாஸ் நடிப்பு..”


படத்தின் ஹீரோ நாக சைதன்யாவின் நடிப்பு படத்தில் அபாரமாக உள்ளதாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த ரசிகர், முதல் பாதி சுமாராக உள்ளதாகவும் இரண்டாம் பாதி மாஸாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் திரைக்கதையும் பின்னணி இசையும் தெறிக்கவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 



“அரவிந்த் சாமி-சரத் குமார் அருமை..”


படத்தில் வரும் காவல் நிலைய காட்சிகள் மற்றும் சாலையில் வண்டியை துரத்திக்கொண்டு செல்லும் காட்சிகள் அருமையாக உள்ளதாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் அணையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு சண்டை காட்சி இடம் பெற்றுள்ளதாம். இந்த காட்சியும் சூப்பராக உள்ளதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். நாக சைத்தன்யாவின் நடிப்பு அபாரமாக உள்ளதாகவும், சரத்குமார் மற்றும் அரவிந்த் சாமி காமெடியில் கலக்கியதற்கு தனி பாராட்டு என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.


 



படத்தின் முதல் முப்பது நிமிடங்களை பொறுத்துக்கொண்டால், ஆக்‌ஷன் நிறைந்த கஸ்டடி படத்தை முழுமையாக என்ஜாய் பண்ணலாம் என அந்த ரசிகர் கூறியுள்ளார். 


“ரொம்ப மோசம்..”


அக்கினேனி குடும்பத்தார் சமீப காலங்களில் நடித்துள்ள படங்கள் அனைத்தும் மன்னை கவ்வி உள்ளன. இதையடுத்து, இன்று கஸ்டடி படம் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் நாக சைதன்யாவின் வாழ்வில் மற்றுமொரு தோல்வி படம் என சிலர் ட்விட்டர் பக்கத்தில் கூறி வருகின்றனர். 


 



“எங்கே தொடங்குகிறது..எங்கே முடிகிறது என்றே தெரியவில்லை..”


கஸ்டடி படம் மோசமாக உள்ளது என ஒரு ரசிகர் கூற மற்றொரு ரசிகரோ, அவரை விட மோசமான சில கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், படம் எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்றே தெரியவில்லை என கூறியுள்ளார். நாக சைதன்யா தனது சிறப்பான நடிப்பை இப்படத்தில் கொட்டியிருந்தாலும், அது அத்தனையும் இப்படத்தின் மூலம் வீணாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


 



கஸ்டடி படத்தில் ஒரே ஒரு பாசிடிவ் என பார்க்கப்போனால், அது அரவிந்த் சாமிதான் எனவும் அந்த ரசிகர் கூறியுள்ளார். இப்படி, பல கலவையான விமர்சனங்களை கஸ்டடி திரைப்படம் பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | இந்த ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி: ரிலீஸ் தேதி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ