சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..


போக்குவரத்து பாதிப்பு: 


இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதியில் தற்போது நடந்து வருகிறது. அங்கு மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள், மாற்று பாதைக்கு காவல்துறையினரால் மாற்றப்பட்டனர். ஆனால் அந்த பாதை குறுகிய பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்பட்டனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் காவல்துறையினர் மற்றும் பவுன்சர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் சற்று பரபரப்பானது. பின்பு படப்பிடிப்பு முடிந்து சாலை வழக்கம் போல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம், சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தில், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, அவர் தனது 50 ஆவது படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இவரது 51வது படத்தின் படப்பிடிப்பும் நடைப்பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ