கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

Kamal Haasan Shelved Movies: நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஒட்டி, அவரால் கைவிடப்பட்ட பிற படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2024, 06:00 PM IST
  • கமல்ஹாசனின் 233வது பட வேலைகள் நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • அவரால் கைவிடப்பட்ட படங்கள்.
  • இவ்வளவு பெரிய லிஸ்டா..!
கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..! title=

ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று ஆசையாக அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். திறமை மிகு நடிகராக ரசிகர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர், நல்ல எழுத்தாளர் என்பதையும் பலர் அறிவர். ஆனால், இவரால் பல படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 

ஹெச்.வினோத்தின் படம்:

நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை, ஹெச்.வினோத் இயக்குவதாக சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதையடுத்து, இப்படத்தின் கதை குறித்த விவாதம் நடைப்பெற்று வந்தது. நீண்ட நாட்களாக இது குறித்த பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில், தற்பாேது இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 
கமல்ஹாசன், வழக்கமாக தான் நடிக்கும் படங்கள் குறித்த கதைகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அதை முழுமையாக கேட்பார். அந்த இயக்குநர்களுக்கு சில கான்செப்டுகளை பரிந்துரையும் செய்வார். அப்படி, ஹெச்.வினோத்தின் கதையிலும் செய்திருப்பார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மருதநாயகம்:

கமல்ஹாசன் நீண்ட நாட்களாக எடுக்க வேண்டும் என தனது கனவு படங்களின் லிஸ்டில் வைத்திருந்த படம், மருத நாயகம். இந்த படம், அதற்கான போதிய பட்ஜெட் இல்லாததால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் 10 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டன.10 சதவிகித படப்பிடிப்பிற்கே, 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பட வேலைகள் கைவிடப்பட்டாலும், மீண்டும் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும் என சிலர் நம்பிக்கையில் உள்ளனர். 

மேலும் படிக்க | Vijay: முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்! கடைசி படம் இதுதான்..இயக்குநர் யார் தெரியுமா?

சபாஷ் நாயுடு:

தசாவதாரம் படத்தில் இடம் பெற்றிருந்த கதாப்பாத்திரம், பல்ராம் நாயுடு. இந்த கதாப்பாத்திரத்தை ஹீரோவாக வைத்து எடுத்து கொண்டிருந்த படம், சபாஷ் நாயுடு. இந்த படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருந்த போது கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இப்படம் கைவிடப்பட்டது. 

மர்ம யோகி:

கமல் ஆசை ஆசையாக வைத்து எடுக்க இருந்த படம், மர்ம யோகி. பெரிய பட்ஜெட்டில் உருவாக இருந்த இந்த படத்தை ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் அதன் பிறகு மோசடி வழக்கில் சிக்கியது. இதனால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. 

தலைவன் இருக்கின்றான்:

கமல், 2018ஆம் ஆண்டில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை இயக்கி நடிக்க இருந்தார். இதில் கமல்-வடிவேலு இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், பட்ஜெட் பிரச்சனை காரணமாக இப்படம் தடைப்பட்டு போனதாக கூறப்படுகிறது.

கமல் நடித்து வரும் படம்..

நடிகர் கமல்ஹாசன், தற்போது ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. கல்கி 2898 ஏடி படத்தின் வில்லனும் இவர்தான். தொடர்ந்து இவர், லோகேஷ் கனகராஜ்ஜின் இன்னொரு படத்திலும் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடரும் சண்டை! விசித்ராவால் வந்த பிரச்சனை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News