தந்தையாக, கணவனாக வென்றரா கவின்.. -டாடா மூவி விமர்சனம்
Dada Movie Review: `டாடா` படம் வெளியாகி திரையரங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது. அந்த படத்தின் திரைவிமர்சனம் குறித்து பார்ப்போம்.
Zee Movie Review: அறிமுக இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'டாடா'. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். "லிப்ட்" திரைப்படத்தை அடுத்டு "டாடா" திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். படம் வெளியாகி திரையரங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. "டாடா" எப்படி இருக்கிறது. அந்த படத்தின் திரைவிமர்சனம் குறித்து பார்ப்போம்.
கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்), இருவரும் காதல் ஜோடிகள். இவர்களுக்கு ஏற்பட்ட காதல்.. காதலையும் தாண்டி கல்லூரி முடிவடையும் முன்னே கர்ப்பிணி ஆனால் சிந்து. பெற்றோர்கள் கைவிட்டாலும் நண்பர்கள் கை கொடுத்தாலும் பணம் கஷ்டம், இருப்பிடம், கல்லூரி படிப்பு, மருத்துவ செலவு என மணிகண்டன் கதற.. சிந்துவின் கர்ப்ப காலத்தில் மணியின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் மந்தமான அணுகுமுறை அவர்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கியது. குழந்தை பெற்ற உடனே சிந்து பெற்றோர், குழந்தையிடம் இருந்து தாயை பிரித்து சென்றனர். இப்போது, மணிகண்டன் தாழ்ந்த பொருளாதார நிலை இருந்தபோதிலும், பிறந்த குழந்தையை தனியாக வளர்ப்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறார். தொடங்கியது தந்தை மகன் உறவு.
மேலும் படிக்க: ரஜினிகாந்தின் ஜெய்லர் சூட்டிங்கில் 2 மெகா ஸ்டார்கள்..! சுட சுட வெளியான அப்டேட்
படத்தின் முதல் பாதியில் பொறுப்பற்ற இளைஞ்சன் ஆக இருக்கும் மணிகண்டன்.. மகன் பிறந்த பிறகு பொறுப்புள்ள தந்தையாக மாறுகிறரா.. சிந்துவை மீண்டும் சந்தித்தாரா என்பதே மீத கதை.
இயக்குனர் வெற்றிப்பெற்றார் என்றே சொல்லலாம் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது கணிக்கும்படி இருந்தாலும். அது இந்த படத்திற்கு மைனஸ் ஆக அமையவில்லை. கவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் அவர் கதாப்பாத்திரத்தை சுமந்து செல்லும் விதம் ரசிக்கும் படியாக இருக்கிறது. வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் அழாத ஒருவராக அவரது கதாபாத்திரம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில், அவரது கண்களில் வரும் கண்ணீர் அக்கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்தது.
அபர்ணா தாஸ் மற்றும் கவின் இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ். VTV கணேஷ், பிரதீப் ஆண்டனி இவர்களின் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மேலோட்டமாக இருப்பதால் எமோஷன் காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. கிளைமாக்ஸ் இல் வரும் பின்னணி பாடலும் சற்று சறுக்கல் தான். இதை தவிர்த்து ஒரு பீல் குட் மூவியாக வெளியாகியுள்ளது 'டாடா'.
மேலும் படிக்க: தமிழ் சினிமாவை மிரட்டிய டாப் 10 வில்லன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ