வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பான புகாரை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.  கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான  வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம், நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..!



இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இவர்கள் இருவரும் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி ஆனந்தவெங்கடேஷ்  முன்பு நடைபெற்றது.


அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில், சிகரெட் மற்றும்  புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம்  விநியோக கட்டுப்பாட்டு சட்டப்பிரிவு படி இந்த புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், இந்த விதி புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் அல்லது விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடப்பட்டது.  சிகரெட்டை விளம்பரபடுத்தவில்லை என்றும், விளம்பரம் என்று கூறப்படும் காட்சி, படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராகவோ அல்லது அதில் உள்ள கலைஞர்களுக்கு எதிராகவோ பொறுந்தாது எனவும், ஏற்கனவே படம் தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தணிக்கை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.   விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.


தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு கொண்டார்.  அடுத்ததாக அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  மேலும் விஜய்யின் லியோ படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.  லோகேஷ் கனகராஜ் தனுஷிடம் 7 நாட்கள் கால்சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும் இது குறித்த தகவல் எதுவம் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | ‘கொலை மிரட்டல் விடுக்கிறார்..’ தந்தை மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ