மீனாட்சி மீது விழுந்த திருட்டு பழி-அடுத்தது என்ன..? மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2023, 10:46 AM IST
  • மீனாட்சி மீது திருட்டு பழி விழுகிறது
  • என்ன செய்யப்போகிறாள் மீனாட்சி..?
  • மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்.
மீனாட்சி மீது விழுந்த திருட்டு பழி-அடுத்தது என்ன..? மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் பெரிய இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க | பிரபலமான படங்களில் நடிக்க இருந்து வாய்ப்பை தவற விட்ட நடிகைகள்..!

இதுவரை நடந்தது…

மீனாட்சி பொண்ணுங்க தொடரில் பல எபிசோடுகளாக ட்விஸ்டிற்கு மேல் ட்விஸ்ட் அரங்கேறி கொண்டிருக்கின்றன. மீனாட்சியின் மெஸ்ஸை இடிக்க வந்த சதிகாரர்கள், மீனாட்சி உயிரிழந்ததாக செய்தி, திருமணம் வரை சென்ற வெற்றி, அவனிடம் மன்னிப்பு கேட்டு போராடிய ஷக்தி, மீண்டும் உயிருடன் வந்த மீனாட்சி என தொடரின் ஒவ்வொரு எண்டிங்கிலும் ஒவ்வொரு ட்விஸ்ட் வந்தது. விறுவிறுப்பு குறையாத இத்தொடரை ரசிகர்களும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். இன்றைய எபிசோடிலும் பல பரபரப்பான திருப்பங்கள் நடைபெற உள்ளன.அவை என்னென்ன தெரியுமா? 

Meenakshi Ponnunga

இன்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் மீனாட்சி தன்னிடம் தான் நகைகள் இருக்கிறது என்று கொண்டு வந்து பஞ்சாயத்தில் கொடுக்கிறாள். இதை கோவில் பூசாரி தான் கொடுத்து வைக்க சொன்னார் என்று சொல்கிறாள். 

ஆனால் பூசாரி நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று பழியை மீனாட்சியின் மீது போடுகிறான். இதனால் அனைவரும் மீனாட்சி திருடி என்று நினைத்து விட மீனாட்சி உண்மையை நிரூபிக்கும் வரை நான் அன்னம் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.

Meenakshi Ponnunga

அதன் பிறகு மீனாட்சிக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டதால் ஊர் மரியாதை பரிவட்டம் புஷ்பா தனக்குத்தான் என்று ஊர்காரர்களிடம் சொல்லி விட ஊர் காரர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் சாந்தா மீது கோரக் காளி வந்து ஆடி யார் உண்மையான திருடன் என்று கண்டுபிடிக்கட்டும் என்று சொல்ல ஊர்காரர்கள் அது மிகவும் கோரமான சாமி என்று சொல்ல ,மீனாட்சி ஒப்பு கொள்கிறாள்.

காணத்தவறாதீர்கள்..

அம்மாவின் மீது விழுந்து திருட்டு பழியை எப்படி போக்குவது? என்ன செய்வது என்று ஷக்தி யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய d சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிரபலமான படங்களில் நடிக்க இருந்து வாய்ப்பை தவற விட்ட நடிகைகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News