பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..!

Jackie Chan: பிரபல நடிகர் ஜாக்கி சான், தனது மகளை புறக்கணித்ததாகவும் இதனால் அவரது மகள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2023, 11:45 AM IST
  • உலகறிந்த பிரபலமாக வலம் வருபவர் ஜாக்கி சான்.
  • இவருக்கு 24 வயதில் ஒரு மகள் உள்ளார்.
  • இவரை ஜாக்கி சான் ஒதுக்கி வைத்துள்ளார்.
பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..! title=

உலகம் முழுவதும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராகவும் சண்டை நாயகனாகவும் பிரபலமானவர் ஜாக்கி சான். இவர், தனது சொந்த மகளை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

ஜாக்கி சான்:

90’ஸ் குழந்தைகளின் பசுமையான நினைவுகளுள் முக்கிய இடத்தை பிடித்தவர், ஜாக்கி சான். இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். 1954ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த இவர், 1960ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார். மறைந்த நடிகர் புரூஸ்லீயை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் வந்த நடிகர் இவர். சண்டையுடன் நகைச்சுவையையும் சேர்த்து கொடுத்து பலரையும் மகிழ்விப்பதில் கெட்டிக்காரர். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று யாரும் தொட முடியாத சாதனை படைத்த ஒரே நடிகர் இவர்தான். தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 

மேலும் படிக்க | மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்…!

ஜாக்கி சானின் மகள்:

ஜாக்கி சானிற்கு 1999ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். இவரது பெயர், Etta Ng Chok Lam.இவர் பிறந்த செய்தியை தவிர, இவர் குறித்த செய்திகள் எதுவும் பெரிதாக வெளியில் வந்ததில்லை. ஜாக்கி சான், தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அவரது மகள் குறித்து பேச மாட்டார். ஆரம்பத்தில் இதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. சில் ஆண்டுகளுக்கு முன்னர்தான் அது ஏன் என்றது அனைவருக்கும் தெரிந்தது. 

தன்பாலின ஈர்ப்பு...

ஜாக்கி சானின் மகள், தன்பாலின ஈர்ப்பாளர். இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால், இவரை ஏற்க ஜாக்கி சான் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜாக்கி சான் தனது மகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அடுத்து அவர் குறித்து தெரிந்து கொள்ள முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

ஜாக்கியின் வைரல் வீடியோ..

ஜாக்கி சான் சமீபத்தில் ஒரு வீடியோவீல் நடித்திருந்தார். Ride ON என்று பெயரிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் ஜாக்கி மகளுடன் அமர்ந்து தனது படங்களை பார்த்து மகிழ்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதற்கு ஹார்டின் விட தொடங்கினர். ஆனால், அந்த வீடியோவில் இருந்தது அவரது மகளே இல்லை என்பதும் ஜாக்கி ஒரு நடிகையை தனது மகளாக ஒரு வீடியோவிற்காக நடிக்க வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, உண்மையான ஜாக்கியின் மகள் குறித்து தேட தொடங்கினர். 

ரோட்டில் அலையும் மகள்?

ஜாக்கி சானின் மகள் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு கனடா நாட்டில் செட்டிலாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதா சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த ஒரு சில போட்டோக்கள் வெளியானது. அதில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் ரோட்டில் ஜாக்கி சானின் மகள் அலைவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. இது குறித்து, ஜாக்கியுடைய மகளின் காதலியே ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், பெற்றோர்களால் தாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார். 

கொந்தளித்த ரசிகர்கள்:

ஜாக்கி சானை இதுவரை தங்களின் வாழ்க்கையில் அங்கமாக பார்த்து வந்த ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். “அவர் நல்ல நடிகராக இருக்கலாம் ஆனால் அவர் நல்ல அப்பா கிடையாது” என சில ரசிகர்கள் சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர். மகள் வீடில்லாமல் இருக்கும் அதே வேளையில், ஜாக்கி சானிற்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ‘கொலை மிரட்டல் விடுக்கிறார்..’ தந்தை மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News