இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி உள்ளார். தனுஷும், செல்வாவும் இணைந்த படங்கள் அனைத்தும் கவனம் ஈர்த்தவை. இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.  இப்படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.  இப்படத்தில் இந்துஜா நாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு வேடங்களின் லுக் சமீபத்தில் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில், நானே வருவேன படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இப்பட்டத்தில் செல்வராகவனும் நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், தனுஷ் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் படிக்க | "தி லெஜண்ட்" படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம்


விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் தனுஷ் கையில் வில் மற்றும் அம்புடன் யங்காக காட்சியளிக்கிறார். காதல்கொண்டேன் படத்தின் மூலம் தனுஷ் மற்றும் செல்வராகவனின் கேரியர் உச்சம் சென்றது. 


 



தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து செல்வராகவன் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அஜித்- 61 ஷூட்டிங் ஸ்பாட் லீக் வீடியோ வைரல்! - அதிர்ச்சியில் படக்குழு!


மேலும் படிக்க | மீண்டும் ஒத்தி போடப்படும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: கோல்லம் கேம் வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ