‘இப்படை வெல்லும்’ படத்தின் டீசரை வெளியிட்டார் தனுஷ்!
உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த ‘இப்படை வெல்லும்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியீட்டார்.
இந்த படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.