Dhanush Priyanka Mohan Starrer Captain Miller Box Office Collection Arun Matheswaran Movie: அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இப்படம், மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியானது. இப்படத்திற்கு தற்போது வரை கிடைத்துள்ள விமர்சனங்களையும், வசூல் விவரத்தையும் பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர்:


கேப்டன் மில்லர் (Capain Miller Cast and Crew) திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், நடிகைகள் பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இவர் ஏற்கனவே தனுஷ் உடன் இணைந்து பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழ, இந்த கூட்டணியும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. 


கேப்டன் மில்லர் விமர்சனம்:


கேப்டன் மில்லர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் (Captain Miller Review) வந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள், படத்தில் சண்டையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது போன்ற விமர்சனங்களை தெரிவித்தனர். இன்னும் சில ரசிகர்கள், சண்டை காட்சிகள் அதிக வன்முறை நிறைந்தவையாக உள்ளதாக தெரிவித்தனர். சண்டை படங்களை விரும்பி பார்க்கும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் இருந்து படம் நன்றாக உள்ளதாகவே விமர்சனம் வந்தது. இதனால், படம் ஒரு தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆகையால் பலரால் படத்தை விரும்பி பார்க்க முடியவில்லை என்றும் கருத்துகள் நிலவி வருகிறது. 


பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்..


கேப்டன் மில்லர் (Captain Miller Box Office Collection) திரைப்படம், கடந்த மூன்று நாட்களில் ரூ.23 கோடி கலக்ஷன்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம், முதல் நாளில் 6.5 கோடியையும், வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 7.5 கோடி ரூபாயை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏகப்பட்ட நெகடிவான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், கேப்டன் மில்லர் படம் ரூ.50 கோடி வரை கலெக்ட் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | மலைக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! அட..இவ்வளவு பெரிய பணக்காரரா?


படத்தின் கதை..


கேப்டன் மில்லர் (Captain Miller Story) படத்தில், தனுஷ் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் கதை 1930களில் நிகழ்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து தனது கிராமத்தை பாதுகாக்க, தனுஷ் போராளியாக மாறுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பிரியங்கா மோகன் அவரது கதாப்பாத்திரத்தில் பொருந்தி போகவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. சிவராஜ் குமாருக்கு பவர்ஃபுல்லான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அதை அவர் கச்சிதமாக முடித்து கொடுத்திருக்கிறார். இவர்கள் மட்டுமன்றி, டைலாக்கே பேசாமல், துப்பாக்கியை எடுத்து பிரிட்டிஷ்காரர்களை போட்டுத்தள்ளும் ஒருவரின் கதாப்பாத்திரமும் டெம்ப்ளேட் ஆக ட்ரெண்டாகி வருகிறது.


டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்..


கேப்டன் மில்லர் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் தளம் பெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரிலீஸ் (Captain Miller OTT) குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு கொடுக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ