சித்தா to கோஸ்ட்-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

This Week OTT Releases Tamil: இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் புதுப்புது படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்ட். 

Written by - Yuvashree | Last Updated : Nov 16, 2023, 01:27 PM IST
  • இந்த வாரம் ஓடிடியில் பல புது வரவுகள் ரிலீஸாகின்றன.
  • சித்தா, கண்ணூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸாகின்றன.
  • ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் முழு லிஸ்ட்.
சித்தா to கோஸ்ட்-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?  title=

தியேட்டரில் புதிதாக வெளியாகும் படங்கள், ரிலீஸான ஒரு சில நாட்கள் அல்லது மாதங்களில் ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கமாகி விட்டது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் ஓடிடி தளங்களின் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஒரு சில படங்கள் நேரடியாகவே ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இவை மட்டுமன்றி பொழுது போக்கிற்கு துளி கூட பஞ்சமின்றி பல்வேறு தொடர்களும் இந்த தளங்களில் உள்ளன. வாரா வாராம், ஒவ்வொரு ஓடிடி தளங்களிலும் ஏதேனும் புது படைப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை பார்க்கலாம் வாங்க. 

சித்தா: (Chithha OTT Release)

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாகியிருந்த படம் சித்தா. இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். சித்தப்பாவிற்கு, அவரது மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை காட்டும் படமாக ‘சித்தா’ இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். இப்படம், எமோஷனல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நாயகி நிமிஷா சஜயன் நடித்திருந்தார். சித்தா படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் (நவம்பர் 17) பார்க்கலாம். 

கோஸ்ட்: (Ghost OTT Release)

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஹீரோவாக கலக்கியிருந்த படம், கோஸ்ட். இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ஹீஸ்ட் த்ரில்லராக உருவாகியிருந்த இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். அவர் மட்டுமன்றி அனுபம் கெர், பிரசாந்த் நாராயணன், சத்ய பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியான போது நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம், தற்போது ஜீ 5 தளத்தில் ஆன்லைனில் வெளியாக உள்ளது. இப்படத்தை நாளை முதல் அந்த தளத்தில் பார்க்கலாம். கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | தளபதி 68 அப்டேட்: விஜய் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஜோதி: (Jothi OTT Release)

கோலிவுட் உலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ல வெற்றி ஹீரோவாக நடித்துள்ள படம், ஜோதி. சஸ்பன்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏ.வி.கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ளார். இப்படம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டப்பட்டிருந்தது. தற்போது, தியேட்டர் ரிலீஸிற்கு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. ஜோதி படத்தை நாளை (நவம்பர் 17) முதல் ஆஹா தமிழ் தளத்தில் ஆன்லைனில் பார்க்கலாம். 

கண்ணூர் ஸ்குவாட்: (Kannur Squad OTT Release)

மலையாளத்தில் வெளியாகும் த்ரில்லர் படங்களுக்கென தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிடித்தமான படம்தான், கண்ணூர் ஸ்குவாட். இந்த படத்தில் மம்மூட்டி, ரானி டேவிட் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இது, மம்மூட்டியின் 421ஆவது படமாகும். இப்படம், உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் காந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியானது. தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தி இப்படத்தை நாளை முதல் பார்க்கலாம். 

பிற படங்களும் தொடர்களும்...

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் சில படங்கள் மற்றும் தொடர்களும் ஓடிடி தளங்களில் நாளை வெளியாகின்றன. அவற்றின் லிஸ்ட் இதோ. 

>தி ரெயில்வே மேன் - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ்
>பிலீவர் 2 - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ்
>தீப்பொறி பென்னி - மலையாளம் - பிரைம்
>அபூர்வா - இந்தி - ஹாட்ஸ்டார் சீரீஸ்
>ரஸ்டின் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்
>ஆல் டைம் ஹை - ஃப்ரென்சு - நெட்ஃப்ளிக்ஸ்
>பெஸ்ட் கிரிஸ்மஸ் எவர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்
>இன் லவ் அண்ட் டீப் வாட்டர் - ஜப்பானிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ்
>நத்திங் டு சீ ஹியர் - ஸ்பானிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

மேலும் படிக்க | லியோ படத்தை பின்பற்றும் சூர்யாவின் கங்குவா! லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News