தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊர் மல்லிங்காபுரம். இந்த ஊருக்கு அருகே உள்ள முத்துரங்காபுரத்தில்தான் அவர்களது குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயம் உள்ளது. அங்கு நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார். 


பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று படத்தின் டைட்டிலே மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாது. "ஜகமே தந்திரம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைபடத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 


இந்நிலயில் இன்று காலை குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.