மே 2024: அதிக டூ-வீலர்களை விற்ற டாப் 8 நிறுவனங்கள்... முதலிடத்தில் எது?

இந்திய வாகனச் சந்தையில் கடந்த மே மாதம் சில்லறை வணிகத்தில் அதிக இருச்சக்கர வாகனங்களை விற்பனை செய்த டாப் 8 நிறுவனங்களை இங்கு காணலாம். 

  • Jun 26, 2024, 17:13 PM IST

அதாவது, இதில் பைக் மற்றும் ஸ்கூட்டிகள், ev ஸ்கூட்டர்கள் என ஒட்டுமொத்தமாக இருச்சக்கர வாகனத்தின் சில்லறை விற்பனை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. 

 

1 /8

8. OLA: மின்சரா இருச்சக்கர வாகனம் மட்டுமே இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 37 ஆயிரத்து 225 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 29.51% வளர்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 9.60% வளர்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.   

2 /8

7. Yamaha: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 54 ஆயிரத்து 488 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 22.37% வளர்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 2.62% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.     

3 /8

6. Royal Enfield: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 63 ஆயிரத்து 239 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 9.22% வீழ்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 12.24% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.   

4 /8

5. Suzuki: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 81 ஆயிரத்து 840 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 32.61% வளர்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 5.06% வளர்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது. 

5 /8

4. Bajaj: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 179 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 6.11% வீழ்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 10.55% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.   

6 /8

3. TVS: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 293 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 4.07% வளர்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 6.04% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.   

7 /8

2. Honda: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 924 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர விற்பனையில் 44.62% வளர்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 0.82% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது.   

8 /8

1. Hero: இந்த நிறுவனம் 2024 மே மாதத்தில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 838 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், வருடாந்திர விற்பனையில் 16.04% வீழ்ச்சியும், மாதாந்திர விற்பனையில் 12.85% வீழ்ச்சியும் இந்நிறுவனம் கண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.